நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் I AM THE RESURRECTION AND THE LIFE 52-0810A ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஆகஸ்ட் 10, 1952 பிலதெல்பியா சபை, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (52-0810A) ...அது வெளிநாடுகளுக்குச் செல்கிறது. மேலும் நான் எப்பொழுதும் வந்து மக்களிடம் கொஞ்சம் பேச முயற்சிக்கிறேன். நான்... சகோதரர் பாக்ஸ்டரும் மற்றவர்களும் காணிக்கையை எடுக்கிறார்கள். எங்கள் கூட்டங்களில் உள்ள பணம் அனைத்தும் மிகவும் விசித்திரமான ஒரு காரியமாகவே இருந்து வருகிறது. நான்... இதை இங்கே சொல்வதற்கு மிகவும் சந்தோஷப் படுகிறேன்...?... ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எனக்கு ஒரு பிழைப்புக்கான வழியாக இருந்ததில்லை. நான் அந்த வழியில் அதைப்பற்றி நினைத்திருந்தால், அது மட்டும்தான் எனக்கு இருந்த ஒரே மாற்று வழியாக இருந்திருந்தால், நான் மீண்டும் வீட்டிற்குச் சென்று, இந்தியானாவில் ஒரு மாநில வனவிலங்கு காப்பாளராக எனது வேலையைத் திரும்பப் பெற்று, வேலைக்குச் சென்றிருப்பேன். நான் பன்னிரண்டு வருடங்களாக ஜெபர்சன்வில்லிலுள்ள ஆராதனைக் கூடாரத்தில் ஒரு பைசா சம்பளமோ, காணிக்கைகளோ, அல்லது எதுவுமோ இல்லாமல் பிரசங்கித்தேன். நான் வேலை செய்தேன், அது அப்படித்தான் இருந்தது. இப்பொழுது எங்காவது எனக்குக் கிடைக்குமானால்... இப்போது, இது மிகவும் விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆனால் நான் சிகாகோவில் இருக்கும்போது, எனக்கு ஒரு வேலை கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால்... ஒருவேளை தெருவில் கடப்பாரையும் மண்வெட்டியுமாக நின்றா லொழிய இங்கே வேறு யாரும் என்னை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். என்னைக் கவனித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன். இப்போது, அது வெறும் தாழ்மையைக் காட்டுவதற்காக அல்ல; அது என் இருதயத்திலிருந்து வருகிறது. காண்கிறீர்களா? என்னால் இன்னும் சற்று நிதானமாக இருக்க முடியும். ஆனால், காண்கிறீர்களா? ஆனால் இது போன்ற கூட்டங்களில், நீங்கள் அப்படிச் செய்ய முடியாது, அடுத்த கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நீங்கள் தொடர்ந்து தேவனோடு நிலைத்திருக்க வேண்டும். 1b ஏனெனில் என்னை நினைவில் கொள்ளுங்கள்... பெரிய ஆராதனைகளில், நாம் ஒன்றாக அமர்ந்திருக்கும் இடங்களில், விமர்சகர்கள் இருக்கிறார்கள்; அங்கே எல்லாமே இருக்கின்றன. ஒரு தவறான அசைவுக்காக சாத்தான் காத்திருக்கிறான், அதன்பிறகு... அவன் சரியாக எதையெல்லாம் சுட்டிக்காட்ட முடியுமோ அது எல்லாவற்றையும் செய்வான். காண்கிறீர்களா? ஆகையால் அது... நான் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள், கடந்த கூட்டங்களில், அது சரியாக உண்மையாய் இருந்திருக்காவிட்டால் என்னவாகி யிருக்கும். என்ன நடந்திருக்கும் என்று பாருங்கள். உங்களில் அநேகர் "தேவனால் அனுப் பப்பட்ட ஒரு மனுஷன்" என்று அழைக்கப்படும் எனது புத்தகத்தை அங்கே படித்திருப்பீர்கள். நீங்கள் சாட்சிகளையும் மற்றவற்றையும் பார்த்திருப்பீர்கள். அந்த நெருக்கடியான இடங்களில் சில விமர்சகர்கள், பைத்தியக் காரர்கள் மற்றும் ஒவ்வொருவரும் மேடைக்கு ஓடிவந்து, "இந்த மணிநேரத்திலேயே, நான் உன்னைக் கொன்றுபோடுவேன். நான் உன் உடம்பில் உள்ள ஒவ்வொரு எலும்பையும் நொறுக்குவேன்" என்று சொல்வார்களானால் என்ன நடந்திருக்கும்? அதைச் செய்ய அவர்களுக்கு நன்றாகவே முடியும்... போதகர்கள் அதைக் கண்டு நடுங்கி ஓடிவிட்டனர். அங்கே நின்று சர்வவல்லமையுள்ள தேவன் அவர்களின் ஜீவனைத் தாக்குவதையும், அந்த நபர் தரையில் விழுவதையும் பாருங்கள்...?... 1c அவர்கள் நின்று, "இது உளவியல்; நீங்கள் மக்களின் மனதை வாசிக்கிறீர்கள்" என்று சொல்வதைப் பாருங்கள். வெவ்வேறு காரியங் களின் முகவர்கள், மற்றும் பெரும்பாலான நேரங்களில், பிரசங்கிகள் மேடைக்கு ஓடிவந்து, "இப்போது, அது உளவியல். நீங்கள் மக்களின் மனதை மட்டுமே வாசிக்கிறீர்கள்" என்று சொல்வார்கள். ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமை இறங்கி வந்து அந்த காரியத்தை பின்னுக்குத் தள்ளுவதை நீங்கள் காண்கிறீர்கள் (காண்கிறீர்களா?), அது எங்கே... ஸ்வீடன், பின்லாந்து, ஆப்பிரிக்கா, நீங்கள் எங்கு சென்றாலும், எதிர்ப்புகள் எப்போதும் இருக்கின்றன: சாத்தான். அதுதான் காரணம், பல மக்கள்... உங்களில் பலரை வந்து சந்திப்பதற்கு நான் எவ்வளவு விரும்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அதைச் செய்ய நான் மிகவும் ஆசைப்படுகிறேன், ஆனால் இந்த நிலையில்... இப்போது, எனது வாழ்க்கையை ஒப்பிட்டு நான் வாழும் விதத்தில் உங்களை வாழச் சொல்ல முடியாது. காண்கிறீர்களா? அவர் என்னை எப்படி வாழ விரும்புகிறாரோ அப்படித்தான் நான் வாழ வேண்டும். 1d இப்போது, நான் மனிதனின் ஊழியக்காரனாகவோ அல்லது தேவனின் ஊழியக்காரனாகவோ இருக்கலாம். தேவனின் ஊழியக்காரனாக இருப்பதற்கு, நான் விலகியிருக்க வேண்டும். நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாலும், நான் மக்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். நான் ஒரு தனிமை விரும்பி அல்ல. என் இருதயம் உங்களுக்குத் தெரியாது, நான் மக்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது. ஆனால் தேவனோடு இருப்பதற்காக நான் மக்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். அந்த நபர் யாராக இருந்தாலும், என் சொந்த மக்களாக இருந்தாலும் சரி... கடந்த நாளிலும் என் சொந்த சகோதரன் இங்கே வண்டியில் வந்தார், என் மனைவி அவர்களுடன் அமர்ந்திருந்தாள். சொல்லப்போனால் என் சகோதரன்...?... மற்றும் மாம்சத்தில் என் சகோதரன். "நீ பல வருடங்களாக என் வீட்டிற்கு வரவில்லை" என்று சொன்னார். என் தாய் அழுதுகொண்டே, "பில்லி, நீ ஏன் அவர்களைப் போய்ப் பார்க்கக் கூடாது?" என்று சொன்னார். ஆனால் நான்... அவர்கள் என் தாய், ஆனால் நான் அவர்களை நேசிக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்கள்... இந்த...?... இன்று மதியம் ஒரு பெண் இங்கே அமர்ந்திருக்கிறாள், அவள் என் மனைவி. ஒரு பெண்ணாக அவளுக்கான அந்தப் பகுதிக்காக, என் எல்லா அன்பும் அவளுக்கே செல்லும் என்று நான் தேவனுக்கும் அவளுக்கும் வாக்குத்தத்தம் அளித்திருக்கிறேன். நான் அதை வாக்குத்தத்தம் செய்தேன். இப்போது, நான் தெருவில் நடந்து செல்லும்போது ஒரு - ஒரு இளம் பெண் வந்து, "நீங்கள், சகோதரர் பிரன்ஹாம் தானா?" என்று கேட்டால். "ஆம், ஐயா." "ஏனென்றால், நான் உன்னை நேசிக்கிறேன்." சரி, முதலில், அந்தப் பெண்ணின் மீது எனக்கு அன்பு இருப்பதாக நான் நினைத்தால், அது பொய்யாகிவிடும். என் மனைவிக்கு நான் அளித்த வாக்குறுதியான அந்த அன்புதான் எனது முதல் கடமை. நான் முதலில் அதைப்பற்றித் தான் சிந்திக்க வேண்டும். அதுதான் முதல். பிறகு நான்... நான் இங்கே எவ்வளவு நினைத்தாலும், இது சரியாக இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் இதுதான் முதலில் சரியாக இருக்க வேண்டும். அது இதற்கு முரணாக இருந்தால், நான் இதைத்தான் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் நான் தேவனுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறேன். சத்தியம், மற்றும் சுவிசேஷம், மற்றும் கிறிஸ்து, மற்றும் மக்கள் ஆகியோரிலும் அது அப்படித்தான் இருக்கிறது. நான் மக்களை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன், ஆனால் என் முதல் அன்பு கிறிஸ்துவிடமே இருக்கிறது. அவருக்குச் செய்வதே எனது முதல் கடமை. எனவே, நான் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் அல்லவா? 1e மற்றும் இந்த மிஷனரி காணிக்கைகள், நான் பணத்தை செலவழிக்க முயற்சித் திருக்கிறேன்... என் வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு காணிக்கையை எடுத்ததில்லை, என் வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு காணிக்கையை எடுத்ததில்லை. ஒரு சமயம் எனக்கு நினைவிருக்கிறது. இதை நான் சில நேரங்களில் சொல்வதுண்டு. என் மனைவி என்னைக் கடிந்துகொள்வாள், அதனால் இன்று மீண்டும் என்னைக் கடிந்துகொள்ள அவள் தயாராக இருக்கக்கூடும், ஏனென்றால் இதோ அது. நாங்கள் திருமணம் முடிந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகியிருந்த நேரம். உங்களுக்குத் தெரியும், பொருளாதார மந்தநிலை காலங்கள் மிகவும் கடினமாக இருந்தன. நான்... எங்களால் குடும்பத்தின் கடைசித் தேவைகளைச் சந்திக் கவே முடியவில்லை. நீங்கள் எப்போதாவது அந்த நிலைக்கு வந்திருக்கிறீர்களா? நாம் அனைவரும் வந்திருக்கிறோம். நீங்கள் வந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் வாரத்திற்கு சுமார் பதினாறு, பதினெட்டு டாலர்கள் சம்பாதித்து வந்தேன், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும், மற்ற எல்லாவற்றிற்கும், நான் நினைத்தேன், "ஐயோ, நான் என்ன செய்வேன்?" எனவே நான் சொன்னேன், "உனக்குத் தெரியுமா? நான் இன்றிரவு ஒரு காணிக்கை எடுக்கப் போகிறேன்." அவள் சொன்னாள், "சரி, நீங்கள் அதைச் செய்வதைப் பார்க்க நான் அங்கே வருகிறேன்." நான் ஒருபோதும் அதை எடுத்ததில்லை, ஆனால் அவள் சொன்னாள்... 1f நாங்கள் அந்தச் சிறிய சபையைக் கட்டியபோது, சரியாக அந்த 1932-ம் நேரத்தில், அதைக் கட்டுவதற்காக நான் கடன் வாங்கினேன், ஒருமுறை கூட நான் காணிக்கை எடுத்ததில்லை. சபையின் பின்பக்கத்தில் இருந்த ஒரு சிறிய பெட்டியில், "மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. அங்கு வந்த மக்களிடம் நான் அதை ஒருபோதும் சொன்னதில்லை, ஆனால் என் தவணைகளைச் செலுத்தும் நேரம் வந்தபோது அது அங்கே இருந்தது. அதுதான் விசுவாச வாழ்க்கை. அதற்காக நீங்கள் தேவனை நம்புகிறீர்கள். காண்கிறீர்களா, நான் செய்ததும் அதுவே. பிறகு, அந்த இரவில் நான் அங்கு சென்றது எனக்கு நினைவிருக்கிறது, நான் ஒரு காணிக்கையை எடுக்கப் போகிறேன். இப்போது, மக்கள் எனக்குக் கொடுக்க மாட்டார்கள் என்பதற்காக அல்ல. நிச்சயமாக, அவர்கள் எனக்காக மரிக்கவும் துணிவார்கள். ஆனால் அவர்கள்... தேவைப்பட்டால், அவர்கள் அதை-அவர்கள் அதைச் செய்வார்கள். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் இளமையாக இருந்தேன், வேலை செய்தேன், ஒரு வேலை இருந்தது. மற்றவர்கள் வேலை செய்கிறார்கள், நான் ஏன் செய்யக்கூடாது? அதனால் என் ஊழியத்தில் அது எனக்கு அதிக தடையாக இருக்கவில்லை, எனவே நான் முன்னேறிச் சென்றேன். ஆனால் அந்த இரவில் எனக்கு நினைவிருக்கிறது, நான்... "சரி, நண்பர்களே," நான் சொன்னேன், "இதைச் சொல்ல நான் கொஞ்சம் தயங்குகிறேன், ஆனால் நான் - நான் - நான் - நான்... ஒரு சிக்கலைச் சந்தித்துள் ளேன். நான் - நான் - நான் - நான்... நாம் ஒரு காணிக்கை எடுப்போம்." நான் சொன்னேன், "சகோதரர் வைஸ்ஹார்ட், என் தொப்பியை எடுத்து வருவீர்களா?" அவர்களிடம் காணிக்கைத் தட்டுகள் எதுவும் இல்லை. "என் தொப்பியை எடுத்து வருவீர்களா?" "ஆம் ஐயா, பில்லி," என்றார் அவர். அவர் என்னை ஒருவித விசித்திரமாகப் பார்த்துவிட்டு, சென்று என் தொப்பியை எடுத்து வந்தார். நான் கீழே பார்த்தேன், வெபர் என்ற பெயருடைய ஒரு சிறிய பெண்மணி வெகு அருகா மையில்...?... ஒரு சிறிய வயதான தாய்...?... சிறிய கட்டமிடப்பட்ட ஏப்ரான்களை அணிந்திருந்தார், அந்த ஏப்ரான்களின் உட் புறத்தில் உள்ள பாக்கெட் (உங்களுக்குத் தெரியுமா?), இங்கே பக்கவாட்டில். சில தாய்மார்களே, நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அதனால் அவள் குனிந்து இந்த சிறிய ஏப்ரானை பின்னால் இழுத்து, மேலே 'ஸ்னாப்' செய்யப்படும் இந்த சிறிய பர்ஸ்களில் ஒன்றை எடுப்பதை நான் பார்த்தேன். உங்களுக்குத் தெரியுமா? அவள் இந்த சிறிய பர்ஸைத் திறந்து, அதிலிருந்த அந்த நிக்கல் நாணயங்களை வைத்துத் துழாவ ஆரம்பித்தாள். ஐயோ, என்னால் அதை எடுக்க முடியவில்லை. அந்த ஏழைத் தாயின் பணத்தை நான் எடுத்திருந்தால், அது என் வாழ்நாள் முழுவதும் என்னை வேட்டையாடியிருக்கும். நான் அவளைப் பார்த்தேன், என் தொண்டை யில் பெரிய பெரிய கட்டிகள் அடைப்பது போல் வீங்கியது. நான் சொன்னேன், "இப்போது, நண்பர்களே, நான் உங்கள் விசுவாசத்தை சோதித்துப் பார்த்தேன். நான் அதை நிஜமாகச் சொல்லவில்லை." நான் சொன்னேன்...?... நான் எப்படி சமாளிக்கிறேன் என்பதைப் பார்க்க என் மனைவி அங்கே அமர்ந்திருந்தாள். உங்களுக்குத் தெரியுமா? 1g அங்கே ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் பொதுவாக சுற்றியுள்ள இந்த கூட்டங்கள் அனைத்திலும் இருப்பார். அவர் இங்கே இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவர் பெயர் ஜான் ரயன். அவர் குருடராய் இருந்த அந்த ஜான் ரைன் அல்ல. இது மற்றொரு ஜான் ரயன். அவர் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று நீங்கள் நினைப்பீர்கள்; அவர் நீண்ட முடிகளையும் நீண்ட தாடியையும் வைத்திருப்பார். ஹம்மண்ட் கூட்டத்திலும் சீயோன் கூட்டங்களிலும் அவர் இருந்தார். எனக்குத் தெரிந்தவரை அவர் இங்கே எங்காவது இருக்கலாம். அவர் என்னைப் பார்க்க கீழே வந்தார். அதனால் அவர் ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தார். சைக்கிளின் விலை அநேகமாக அவருக்கு மூன்று டாலர்கள் இருக்கலாம். அது ஒரு - அது ஒரு நிஜமான... உங்களுக்குத் தெரியுமா? அந்த நீண்ட முடி பறக்க, ஒரு பக்கத்தில் தாடியுடன் என்னைப் பார்க்க அவர் கீழே வந்தார். சரி, அவர் அங்கே கீழே சென்றபோது அது பின்வாங்கிப் போனது என்று நினைக்கிறேன். இப்போது, அது ஒரு பாப்டிஸ்ட் காரர் சொல்வதற்கு ஒரு பெரிய வார்த்தை அல்லவா? பின்வாங்கிப் போனது. ஆனால் அவர்... எப்படியிருந்தாலும் அந்த சைக்கிள் அப்படித் தான் ஆனது. அவர் எழுந்து நின்று, "சகோதரர் பில், நீங்கள் அந்தப் பொருளை வைத்துக் கொள்ளலாம்" என்றார். அவர் வேறொருவர் வாகனத்தில் ஏறி திரும்பிச் சென்றார். அதனால் அவர் அந்த சைக்கிளை எனக்குக் கொடுத்தார். அந்த இரவு நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, மனைவி கேட்டாள், "நீங்கள் அந்தக் காணிக்கையை எடுக்கப் போகிறீர்கள் என்று நினைத்தேனே?" இப்போது, திங்கள்கிழமை, நான் நினைத்தேன், "நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்?" நான் சென்று பதினைந்து சென்ட்களுக்கு ஒரு பெயிண்ட் டப்பாவை வாங்கிக்கொண்டு வந்து, அந்த பழைய சைக்கிளை சரிசெய்து வண்ணம் பூசி, பத்து டாலர்களுக்கு விற்றேன். எதற்கும்-அதற்குப் பிறகு அந்தக் காணிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்... இப்போது, அது... ஆனால் என்னால் எடுக்க முடியாத உணர்வுகள்... அந்த ஏழை சிறிய வயதான பெண் அந்த பென்னிகளையும் மற்றவை களையும் அதில் போடப்போகிறாள் என்று எனக்குத் தெரியும், ஒருவேளை அவள் அதை வேறு எதற்காகவாவது சேமித்து வைத்தி ருக்கலாம். மேலும் நான் ஒரு இளைஞன், அவளுக்கு அறுபத்தைந்து வயதிருக்கும், அல்லது ஏதோ ஒன்று, என்னால் அதைச் செய்ய முடியாது. எனவே நாங்களும் அதே வழியில் செய்ய முயற்சிக்கிறோம். எங்கள் ஆராதனைகள் பணத்திற்காக மக்களிடம் யாசிப்பது அல்ல. எனது மேலாளர்களில் யாராவது பணத்திற்காக கெஞ்சுவதை ஒருமுறையாவது நான் கேள்விப் பட்டால், அதுதான் அந்த மேலாளருக்கு முடிவு. அதுபோன்ற மேலாளர்கள் இனி எங்களுக்கு இல்லை. ஏனென்றால், தேவன் இங்கே எனது தேவைகளைச் சந்திக்காதபோது, நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால் நாங்கள்-மேலும் மற்றொரு தரிசனத்திற்காக காத்திருப்போம். 1h அதனால் நான்-நான்-நான் அதில் அவ்வளவு திறமையானவன் அல்ல சகோதரர் போஸ், நான்... நான்-நான் அநேகமாக அதற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் என்பதைப் பார்க்கிறேன். நான் முதன்முதலாகப் பேச முயற்சித்த அந்த மாதிரியான ஒன்று எனக்கு நினைவிருக்கிறது, நான் பயந்து செத்துப் போனேன். அப்படிப்பட்ட ஒன்றை நான் பார்த்ததே இல்லை. நான் ஒரு பெந்தெகோஸ்தே கூட்டத்தில் இருந்தேன், அவர்கள் என்னை மேடைக்கு அழைத்திருந்தார்கள். எவ்வளவு நெருக்கம் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த விஷயத்தைக் கண்டு நான் பயந்தேன். நான் அதைப் பார்த்து, பின்வாங்கி, அது - அது இங்கே மிஷாவாகாவைச் சுற்றி இருந்தது. [சகோதரர் போஸ் பேசுகிறார்] ஆம். சரி. இப்போது, [சகோதரர் பிரன்ஹாம் ஒருவரிடம் பேசுகிறார்] ஆம், ஐயா. அது அநேகமாக அப்படித்தான், ஏனென்றால் எனக்கு நிச்சயமாக அதைப் பற்றி எதுவும் தெரியாது. நான்-அதில் நான் உறுதியாக இருக்கிறேன். சரி-சரி. சொல்லுங்கள், உங்களுக்குத் தெரியுமா, எல்லாவற்றிற்கும் மேலாக, பணம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது, இல்லையா, சகோதரரே? அதை இப்போது செய்து முடிப்பதில் நான் உறுதியாக இருந்தேன். அது மிகவும் அருமை. நன்றி, சகோதரரே. அது மிகவும் நல்லது. 1j இப்போது, இன்று மதியம் நாம் இங்கே-இருக்கும்போது... சகோதரர் பாக்ஸ்டர் சொன்னார், "சரி இப்போது, சகோதரர் பிரன்ஹாம், ஒரு மிஷனரிக்காக..." இப்போது, என்னால் முடியவில்லை... என்னால் முடிந்தது...?... கர்த்தருக்காக ஒரு காணிக்கையை நான் எடுக்க வேண்டிய நேரம் வந்தால், என்னால் அதைச் செய்ய முடியும். ஆனால் எனக்காக அதைச் செய்ய முடியாது. ஆனால் இங்கே அதிக நாட்களுக்கு முன்பு இல்லை, ஒரு பெரிய தொகை (உங்களில் பலர் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.) எனக்குக் கொடுக்கப்பட்டது, அதை நான் பார்க்கவும் மறுத்துவிட்டேன். உங்கள் அனைவரையும் நான் சந்தோஷப்படுத்தியிருக்க முடியும், சும்மா அதிலிருந்து எடுத்து...?... இப்போது நமக்குள்ளே... ஒரு மில்லியன் ஐநூறாயிரம் டாலர்கள். காண்கிறீர்களா? நான் அதைத் திரும்பிப் பார்க்கக் கூட மறுத்துவிட்டேன். காண்கிறீர்களா? அதைப்பற்றி அவர்கள் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியிட்டார்கள். ஆனால் நான்-நான் அதை விரும்பவில்லை. அது பணம் அல்ல. பணத்தின் மீதும், புகழின் மீதும், அதுபோன்ற காரியங்களின் மீதும் தன் மனதை வைக்கும் ஒரு மனிதன், அவன் நிச்சயமாக வெளியேதான் இருக்கிறான். வரலாற்றைப் படிப்பதில் மூன்று காரியங்களை நான் கவனித்திருக்கிறேன், அது ஒரு போதகரின் வாழ்க்கையை ஆரம்பத் திலிருந்தே நாசமாக்குகிறது: அவற்றில் ஒன்று பணம், அதன் மீதான அன்பு. அடுத்தது புகழ். தான் ஒன்றுமே இல்லை என்றிருக்கும்போது, தான் ஏதோ ஒன்று என்று அவன் நினைப்பது. அடுத்தது பெண்கள். அது சரிதான். மனிதனைப் பிடிப்பது பணம், பெண்கள், புகழ். தேவனுடைய பிள்ளைகளோடு தேவன் சிக்கலைச் சந்தித்த மூன்று முக்கிய காரியங்கள் இவைதான். இதோடு கூடவே செல்லும் மற்ற பல காரியங்களும் இருக்கின்றன. ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், தேவன் ஒரு சகோதரனை ஆசீர்வதித்து, அவருக்கு சற்று அதிகமாக-அல்லது மக்களுக்கு உதவ வேறு ஏதேனும் ஒன்றை கொடுக்க ஆரம்பிக்கும்போது, அந்த மனிதன், "நான் யார் என்று பார்த்தாயா?" என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அந்த நொடியிலேயே அவன் கீழ்நோக்கிச் செல்லும் பாதையில் இருக்கிறான். எப்படி மேலே செல்வது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா? கீழே செல்லுங்கள். மேலே செல்வதற்கான வழி கீழே செல்வதாகும். தன்னைத் தாழ்த்துகிறவனை, தேவன் உயர்த்துவார். அது சரியா? தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். 1k இப்போது, மதிய நேரத்தில் இதுபோன்று பேசுவதற்கு... நான்-நான் ஒரு-ஒரு பிரசங்கி அல்ல. கல்வி கற்ற மனிதர்களாகிய சகோதரர் பாக்ஸ்டர், ஸ்டார் மற்றும் சகோதரர் போஸ், இங்கு அமர்ந்திருக்கும் இந்த மற்ற போதகர்களுக்குப் பின்னால் நான் வரும்போது, எனது சிறிய ஆரம்பப் பள்ளிக் கல்வி அவ்வளவு தூரம் போகாது; நான் உங்களிடம் சொல்கிறேன். போர்ட் வெய்ன் கூட்டத்தில், நான் அதை ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் அங்கே வெளியே பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன் (உங்களுக்குத் தெரியுமா?), ஆராதனை முடிந்த பிறகு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று திரைகளுக்குப் பின்னால் திரும்பி வந்தேன்; திரும்பி நடப்பதற்கு நான் மிகவும் சோர்வாக இருந்தேன். அங்கே ஒரு சிறந்த அறிஞர் என்னிடம் நடந்து வந்து, "சகோதரர் பிரன்ஹாம்" என்றார், "உங்கள் இலக்கணம் மிகவும் மோசமாக இருக்கிறது" என்றார். நான் சொன்னேன், "ஆம், ஐயா. எனக்கு அது தெரியும்." நான் சொன்னேன், "நான் ஏழாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். என் தந்தை இறந்துவிட்டார், நான் பத்து பேரைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது..." "ஓ, அதெல்லாம் ஒரு சாக்குப்போக்கு அல்ல." அவர் சொன்னார், "ஐயோ," என்று கூறி, "இன்றிரவு நீங்கள் செய்த தவறுகள்." "நீங்கள்-நீங்கள் அதைவிடச் சிறந்த இலக்கணத்தை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் யாருக்காகப் பேசுகிறீர்களோ அந்தக் கூட்டம்," என்று கூறி, "அது, அது ஒரு அவமானம்" என்றார். நான் நினைக்கிறேன் அவர் மிஸ்டர் வெப்ஸ்டரின் ஒரு பகுதியாக இருப்பார், உங்களுக்குத் தெரியும், எனவே நான் சொன்னேன், "சரி, ஐயா," நான் சொன்னேன், "அது சரிதான் என்று எனக்குத் தெரியும்." நான் சொன்னேன், "ஆனால்..." அவர் சொன்னார், "சரி, நீங்கள் ஒரு - ஒரு அஞ்சல் வழிக் கல்வியை (correspondence course) எடுக்கலாம்." நான் சொன்னேன், "ஆம், ஐயா. ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் பாருங்கள்," நான் சொன்னேன், "நான்... நான் ஒரு பெரிய குடும்பத்தையும் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது, இப்போ தெல்லாம் குடும்பத்தை நடத்தவே," மேலும் நான் சொன்னேன், "மேலும் இப்போது," நான் சொன்னேன், "கர்த்தருடைய வேலை மிகவும்-என்னை மிகவும் பிஸியாக வைத்திருக்கிறது," நான் சொன்னேன், "அதை-அதை எடுக்க எனக்கு நேரம் இல்லை." அவர் சொன்னார், "ஓ, அதெல்லாம் ஒரு சாக்குப்போக்கு அல்ல." அவர் சொன்னார், "இன்றிரவு நீங்கள் வெளியே சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன், 'இன்றிரவு இந்த போல்பிட் (polepit) அருகே வரும் நீங்கள் அனைவரும், விசுவாசித்தால் சுகமடைவீர்கள்.'" நான் சொன்னேன், "ஆம், ஐயா. அதில் என்ன தவறு இருந்தது?" எனக்கு வித்தியாசம் தெரியாது. அதற்கு அவர், "ஏனென்றால், நீங்கள் 'போல்பிட் (polepit)' என்று சொல்லக்கூடாது"; "நீங்கள் 'புல்பிட் (pulpit)' என்று சொல்ல வேண்டும்" என்றார். அவர் சொன்னார், "நீங்கள் 'புல்பிட் (pulpit)' என்று சொன்னால் அந்த மக்கள் உங்களை இன்னும் அதிகமாக பாராட்டுவார்கள்." ஆனால் அவர் என்னைக் கொஞ்சம் கடினமாகவே கிள்ளிவிட்டார். உங்களுக்குத் தெரியுமா? எனவே நான் என் கையை அவரது தோளில் வைத்தேன்; நான் சொன்னேன், "சகோதரரே, உங்கள் மனதைப் புண்படுத்துவது என் நோக்கமல்ல (காண்கிறீர்களா?), ஆனால் வெளியே இருக்கும் அந்த மக்கள் நான் 'போல்பிட்' என்று சொல்கிறேனா அல்லது 'புல்பிட்' என்று சொல்கிறேனா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும், நான் எதைப் பற்றி பேசுகிறேனோ அதை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பு கிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கிறார்கள்; அதைப் பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்படுகிறார்கள்." அது சரிதான்...?... சரி இப்போது, நான்... அதனால் தான் நான் ஒரு போதகர் அல்லது பிரசங்கி என்று சொல்வதில்லை. 1m நான் ஒரு சிறுவனாக இருந்தபோது, என் தந்தை ஒரு-ஒரு குதிரை சவாரி செய்பவராக இருந்தார், அவர் ரோடியோக் களையும் (rodeos) மற்றவற்றையும் பின் தொடர்ந்து, வித்தையான சவாரிகளைச் செய்வார். அவர் கைத்துப்பாக்கிகளால் சுடுவதில் வல்லவர், அவர் ஒரு வரிசையாக டப்பாக்களை வெளியே எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன், அந்த மாதிரியான சின்னஞ்சிறிய டப்பாக்களை எடுத்து, அப்படியே வெளியே தூக்கி எறிந்து, இரண்டு துப்பாக்கிகளை எடுத்து அந்த டப்பாவை உருட்டிக்கொண்டே இருப்பார். ஏன், ஒரு பெரிய பன்றிக்குழுப்பு டப்பாவைக் கூட என்னால் துப்பாக்கியால் அப்படிச் சுட முடியாது, அதனால் அது... எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்று பாருங்கள். மேலும் ஒரு சவாரி செய்பவர், ஏன், அவர் சும்மா... அவரது மூக்கு மற்றும் காதுகளிலிருந்து இரத்தம் பறக்கும் வரை அவர் சவாரி செய்வதை நான் பார்த்திருக்கிறேன். நான் நினைத்தேன், "சரி, ஐயோ, அது... அவர்..." நான் ஒரு பெரிய பையனாக வளர்ந்ததும், "நான் என் அப்பாவைப் போல ஆகப் போகிறேன்" என்று சொன்னேன். அதனால், எங்களிடம் ஒரு பழைய உழவுக் குதிரை இருந்தது. நான் வாழ்நாள் முழுவதும் இந்தியானாவில்தான் வசித்தேன். எங்களிடம் ஒரு பழைய உழவுக் குதிரை இருந்தது; அதற்கு சுமார் பதினான்கு வயதிருக்கும். மேலும் நாள் முழுவதும் அந்தப் பழைய குதிரையைக் கொண்டு உழுவோம், எங்களிடம் ஒரு பழைய தண்ணீர் தொட்டி இருந்தது, அது ஒரு-ஒரு மரக்கட்டையிலிருந்து வெட்டப்பட்டிருந்தது. பழைய மரக்கட்டையை வெட்டும்போது, அதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? சரி, இங்கே உள்ள நாட்டுப்புற மக்களைப் பாருங்கள், பார்ப்பீர்களா? ஐயோ, அது அருமை. சரி, நான் என்-என் கோட்டையும் என் டையும் இப்போது கழற்றிவிடுகிறேன். 1n எனவே அந்த-எங்கள் பழைய தண்ணீர் தொட்டி, கீழே அவர்கள் தண்ணீர் அடிக்க வேண்டிய இடத்தில் இருந்தது. உங்களுக்குத் தெரியுமா? குதிரைக்கு தண்ணீர் கொடுப்பதற்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதற்கு முன்பா கவே, குழந்தைகளில் ஒருவன் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தண்ணீர் அடிக்க வேண்டியிருக்கும். எனவே அப்பா எங்களைப் பார்க்க முடியாதபடி, நாங்கள் கொட்டகைக்குப் பின்னால் செல்வோம். நான் உள்ளே நழுவிச் சென்று, அவருடைய சேணத்தை (உங்களுக்குத் தெரியுமா?) எடுத்து, நாங்கள் அதற்குத் தண்ணீர் காட்டிய பிறகு அந்த பழைய குதிரையின் மீது எறிந்து, கடிவாளம், மற்ற கியர்களை அகற்றுவேன். பின்னர் நான் கையை நீட்டி, ஒரு கைப்பிடி நிறைய நெருஞ்சி முட்களை எடுத்து, அவற்றை சேணத்தின் அடியில் (உங்களுக்குத் தெரியுமா?) வைத்து, சேணப்பட்டையை (girth) கீழே இழுப்பேன். இந்த வைக்கோல் தொப்பியுடன் இந்தப் பழைய குதிரையின் நடுவில் ஏறி அமர்வேன். உங்களுக்குத் தெரியுமா? அந்த ஏழை பழைய குதிரை, மிகவும் வயதாகி, விறைத்து, சோர்வடைந்து, தரையிலிருந்து தன் கால்களை எடுக்க முடியாது. அது சும்மா கத்தும். அது அங்கே நின்று கத்தும்போது. நான் என் தொப்பியை என் கையில் எடுத்துக்கொண்டு, நான் கத்தி கூச்சலிடுவேன், என் சகோதரர்கள் அனைவரும் வேலி தூண்களில் சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள், அவர்கள் அனைவரும் அங்கே அமர்ந்தி ருப்பார்கள். நான் ஒரு கவ்பாய் (cowboy). ஐயோ, என்னால் உண்மையாகவே சவாரி செய்ய முடிந்தது. அந்த ஏழைப் பழைய குதிரை, ஏன், இங்கே வெளியே ஒரு மரக்குதிரையில் சவாரி செய்வது போல இருந்தது, அது அவ்வளவு மோசமாக இருக்காது. 1p எனக்கு பதினெட்டு வயது வந்தபோது, நான் நினைத்தேன், "சரி, எனக்கு இப்போது போதுமான வயது ஆகிவிட்டது. நான் ஒரு கவ்பாயாக மாறுவதற்காக மேற்கே செல்லப் போகிறேன்." அநேகமாக நிறைய திரைப் படங்களைப் பார்த்திருப்பேன். எனவே நான் மேற்கு நோக்கிச் சென்றேன். ஒரு ரோடியோ நடக்கும் அதே நேரத்தில் நான் அரிசோனாவில் தரையிறங்கினேன். சரி, நான் கீழே சென்றேன்; என்னிடம் கொஞ்சம் பணம் இருந்தது, நான் சென்று ஒரு ஜோடி லெதர் பேண்ட் (சப்ஸ்) வாங்கப் போனேன். அதனால் அவர்கள் ஒரு நல்ல பெரிய ஜோடியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உங்களுக்குத் தெரியுமா? அதை நான் அப்படிப் போட்டுக்கொண்டேன். எப்படியிருந்தாலும் நான் ஒரு பையன்தான் (உங்களுக்குத் தெரியுமா?), நான் வாங்கிய போது, தரையில் தொங்கிக் கொண்டிருந்த தோல் சுமார் பதினெட்டு அங்குலங்கள் இருந்தது. அந்த இறகுகள் என் பின்னால் கீழே இருப்பது போல (உங்களுக்குத் தெரியுமா?), இந்த சிறிய பாண்டம் கோழிகளில் ஒன்றைப் போல இருந்தது. நான் நினைத்தேன், "சரி, கென்டக்கியைச் சேர்ந்த நமக்கு இங்கே அரிசோனாவில் இவை மிகவும் பெரியதாக இருக்கிறது." எனவே நான்-நான் ஒரு ஜோடி லீவைஸ் வாங்கிக்கொண்டு வெளியே சென்றேன், ரோடியோவில் அவர்கள் குதிரைகளை சவாரி செய்யும் அந்த அடைப்பு வேலியின் மீது ஏறினேன். அவர்கள் சொல்வதை நான் கேட்டேன், "இப்போது, அடுத்து கன்சாஸ் அவுட்லா (Kansas Outlaw) வரப் போகிறது. இன்னாரால் அது சவாரி செய்யப்படப் போகிறது, அதை அப்படியே தொடருங்கள், அழைப்பாளர் கடந்து சென்றார். அங்கே அமர்ந்திருந்த அந்த முகம் சிதைந்த கவ்பாய்கள் அனைவரையும் (உங்களுக்குத் தெரியுமா?), வானிலையால் அடிபட்டவர்களை அந்த வேலியின் ஓரமாக நான் பார்த்தேன். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் எல்லோ ரையும் பார்த்தேன், "அந்த ஆட்களுடன் நான் மேலே அங்கேதான் இருக்க வேண்டும்" என்று நினைத்தேன். அதனால் நான் கீழே இறங்கி மேலே சென்று இந்த அடைப்பு வேலியின் மீது அமர்ந்தேன் (உங்களுக்குத் தெரியுமா?), வெறும் லீவைஸ் அணிந்துகொண்டு, இரண்டு காதுகளிலும் தொங்கும் எனக்கு மிகவும் பெரியதாக இருந்த ஒரு தொப்பியுடன். அதற்கு ஒரு டாலர் தொண்ணூற்றைந்து சென்ட் மட்டுமே ஆனது, அதனால் அது ஒன்றும் பெரிய தொகை இல்லை. உங்களுக்குத் தெரியுமா? சரி, நான் ஒரு உண்மையான குதிரை வீரன் என்று நினைத்தேன், ஏனென்றால் அந்தப் பழைய உழவுக் குதிரையை நான் சவாரி செய்திருக்கிறேன் (உங்களுக்குத் தெரியுமா?), மேலும் "என்னாலும் அதைச் செய்ய முடியும்" என்று நான் நினைத்தேன். உண்மையான ஒரு அவுட்லாவில் (outlaw) சவாரி செய்வதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. உங்களுக்குத் தெரியுமா? 1q சிறிது நேரம் கழித்து, அவர்கள் இந்தக் குதிரையை காளைகளின் தொழுவமான சூட்டிற்குள் (chute) ஓட்டிக்கொண்டு வந்தார்கள். அது வெளியே வந்தபோது, அந்த மனிதன் அங்கே நின்றுகொண்டிருந்தான், அவர்கள் சேணத்தைக் கட்டியபோது அவன் சேணத்தில் கீழே குதித்து, கிடைத்தபடி பிடித்துக்கொண்டு நின்றான். அந்தக் குதிரை அலறுவதையும், கத்துவதையும், எச்சில் துப்புவதையும் நான் கேட்டேன், "ஓ, ஓ. இது என் வீட்டில் இருந்த அந்த பழைய உழவுக் குதிரை இல்லை" என்று நினைத்தேன். அவன் அங்கிருந்து வெளியே குதித்தபோது, இந்த மனிதன் நேராக சேணத்தில் குதித்தான்; அவன் இப்படி சுமார் இரண்டு பக்கவாட்டுச் சுழற்சிகளைச் செய்து ஒரு சன்பிஷ் (sunfish) துள்ளலைச் செய்தான்; சேணம், மனிதன், எல்லாம் வெளியே போனது. அவன் தரையில் விழுந்தபோது மீட்பவர்கள் குதிரையைப் பிடித்தனர், ஆம்புலன்ஸ் மனிதனைப் பிடித்தது. அவனுடைய மூக்கு மற்றும் காதுகள் மற்றும் எல்லாவற்றிலிருந்தும் இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. இங்கே அழைப்பாளர் வந்தார், "முப்பது வினாடிகள் சவாரி செய்யும் எந்த மனிதனுக்கும் நான் ஐம்பது டாலர்கள் தருவேன்" என்று அவர் சொன்னார். சரி, நான்... அங்கே சவாரி செய்துகொண்டு வந்தேன், "சரி" என்று சொன்னேன். வேலியில் அமர்ந்திருந்த அனைத்து கவ்பாய்களும்... அவர் சொன்னார், "முப்பது வினாடிகள் சவாரி செய்யும் எந்த மனிதனுக்கும் நான் ஐம்பது டாலர்கள் தருவேன்." அது இன்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் டாலர்கள் கொடுப்பதைப் போன்றது. அப்பாடா, அந்த ஐம்பது டாலர்கள் மிகவும் நன்றாகவே ஒலித்தது. அவர் நேராக என்னைப் பார்த்து, "நீ ஒரு சவாரி செய்பவனா?" என்றார். நான் சொன்னேன், "இல்லை, ஐயா." அது உழவுக் குதிரை இல்லை. 1r அதுதான் காரணம், இப்போது நான் அதைப் பற்றி பேசும்போது... நான் சபையைச் சுற்றி என் வீட்டில் இருக்கும்போது, "நீங்கள் ஒரு பிரசங்கியா?" என்று கேட்பார்கள். "ஆமாம்." ஆனால் இதுபோன்று வெளியே இந்த பிரசங்கிகளைச் சுற்றி வரும்போது, "நீங்கள் ஒரு பிரசங்கியா?" என்று கேட்பார்கள். நான், "இல்லை, ஐயா" என்று சொல்வேன். இல்லை. ஆனால் நான் கர்த்தருடைய வார்த்தையை நேசிக்கிறேன், கர்த்தருடைய வார்த்தையைச் சுற்றி நமக்கு ஐக்கியம் இருக்கும்போது அவரை எங்கும் ஆராதிப்பதை நான் நேசிக்கிறேன். இப்போது, நான் பொதுவாக இதுபோன்று வெளியே பயன்படுத்தும் சில சிறிய தலைப்புகள். நான் வீட்டிற்குச் செல்லும்போது பைபிளுக்குள் சென்று, பழைய மற்றும் புதிய ஏற்பாடு போன்றவைகளைக் கற்பிக்கிறேன், இதில் அல்ல...?... கிரேக்கம் மற்றும் எபிரேயம், ஏனென்றால் எனக்கு அது தெரியாது. நான் இதை இங்கே பார்ப்பது போன்றும், பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துவது போன்றும் மட்டுமே. 1s இன்று மதியம், கர்த்தருக்குச் சித்த மானால், நான் இங்கே ஒரு சிறிய தலைப்பை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை நான்-உங்களில் சிலர் அதைப் பற்றி நான் பிரசங்கித்ததைக் கேட்டிருக்கலாம். "ஒரு மனுஷனை வந்து பாருங்கள்" என்பது போன்ற நான்கு அல்லது ஐந்து வித்தியாசமான சிறிய தலைப்புகளை நாடெங்கிலும் நான் பிரசங்கித் திருக்கிறேன். நான் வழக்கமாக சில நேரங்களில் அதைப் பயன்படுத்துகிறேன். அது... "கிணற் றருகில் இருந்த ஸ்திரீ," மேலும் ஒவ்வொரு முறையும் அது வித்தியாசமாக இருக்கும்படி, நான் வழக்கமாக அதை ஒரு வித்தியாசமான முறையில் அணுக முயற்சிக்கிறேன். அதுபோல ஒரு சிறிய தலைப்பு, ஏனென்றால் அந்தப் பக்கத்தில் நான் வெகுதூரம் செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் நான் ஆராதனைகளைத் திரும்பப் பெற இன்றிரவு திரும்பிச் செல்லும்போது, அது ஒரு வித்தியாசமான அபிஷேகம் மற்றும் அது சில நேரங்களில் என்னை வருத்தப்படுத்துகிறது. காண்கிறீர்களா? எனவே அல்லது "இதை விசுவாசிக்கிறாயா? அல்லது-அல்லது "தேவனைக் காண்பதற்கான நான்கு வழிகள்," அல்லது "பிறகு அவர் சத்தமிட்டார்," அல்லது அது போன்ற சிறிய காரியங்கள். ஆகையால் இன்று மதியம், "ஆண்டவரே, இப்பொழுதும்..." என்று பரிசுத்த யோவான் நற்செய்தியிலிருந்து-அதிலிருந்து நான் வாசிக்க விரும்புகிறேன். 1 பரிசுத்த யோவான் 11-ஆம் அதிகாரத் திலிருந்து நான் வாசிக்க விரும்புகிறேன். வார்த்தையை வாசிப்பதன் மூலமாக, தேவன் அதற்கான பலனை உருவாக்குவார். அதை நீங்கள் நம்பவில்லையா? இதற்கு முன்பு நான் எங்கேயோ இதைக் குறித்து பேசியிருக்கிறேன், ஒருவேளை, இங்கு அருகாமையிலோ அல்லது நாட்டின் வேறு எங்கோ இருக்கலாம். அப்படியிருந்தால், இதை வேறு விதமாக அணுக முயற்சிக்கப் போகிறேன். அதை நாம் எடுத்துக்கொள்வோம்... இப்போது, சகோதரர் பாக்ஸ்டர் தான் பிரசங்கம் செய்கிறார். நான் சும்மா கீழே வந்தேன். இன்று மதியமும், அப்புறம் இன்றிரவுக்காகவும் இது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 2 பரிசுத்த யோவானின் 11-ம் அதிகாரம், 18 அல்லது 19-18-ம் வசனத்திலிருந்து தொடங் குவோம், அந்த வேதப்பகுதியிலிருந்து கொஞ்சத்தை வாசிப்போம். பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற வனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். இப்போது, ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை வணங்கி, இந்தப் புத்தகத்தின் ஆசிரியரிடம் பேசுவோம். 3 கர்த்தராகிய இயேசுவே, ஜீவனின் எஜமானரே, உம்முடைய கிருபையினால் நன்மையான ஈவுகள் அனைத்தையும் தருகிறவரே, நாங்கள் எங்களுடைய தகுதியினால் அல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவரால் தேவனுடைய கிருபை எங்கள் இருதயங்களில் ஊற்றப் பட்டதாலேயே இரட்சிக்கப்பட்டிருக் கிறோம் என்று அறிந்திருக்கிறோம். ஒரு காலத்தில் நாங்கள் அந்நியர்களாகவும், தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டவர்களாகவும், ஊமையான விக்கிரகங்களை ஆராதிக்கிற புறஜாதிகளாகவும் இருந்தோம். ஆனால் ஏற்ற காலத்தில், குற்றவாளிகளான எங்களுக்காக குற்றமற்றவரான கிறிஸ்து மரித்து, எங்களை பிதாவினிடத்திற்கு கொண்டு சென்றார். இப்போது நாம் தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத் திகளாக இருக்கிறோம். நாம் எப்படி இருப்போம் என்பது இன்னும் வெளிப் படவில்லை, ஆனால் அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், நாமும் அவரைப் போன்ற ஒரு சரீரத்தைப் பெறுவோம் என்று அறிந்திருக்கிறோம். ஆண்டவரே, அழியாமையைத் தரித்துக் கொள்ளவும், அவருடைய ஆவியினால் தரிப்பிக்கப்படவும், என்றோ ஒரு நாள்... என இந்த சரீரங்களில் நாங்கள் எப்படித் தவிக்கிறோம். 4 பழைய ஏற்பாட்டில் காளைகள் மற்றும் ஆடுகளின் இரத்தம் பாவத்தை நீக்க முடியாது என்பதை நாம் அறிவோம். அது பாவத்தை மூட மட்டுமே செய்தது. பாவங்கள் நீக்கப்படும் அந்த நாளுக்காக, வாழ்ந்தவர்கள் பரதீசில் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேவகுமாரனாகிய மேசியா, இயேசு வந்தபோது, அவர் பாவத்தை நீக்கினார். அவர் அதை மூடிவைக்காமல், முற்றிலும் பிரித்து, அதனை அகற்றிவிட்டார். பிறகு, இப்போது, அப்போதிலிருந்து, இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், மகிமையில் நமக்காக ஒன்று காத்திருக்கிறது; நாம் நேராக பிதாவின் சமுகத்திற்குச் சென்று, அங்கே அழியாமையைத் தரித்துக்கொள்கிறோம். ஓ, இன்று மதியம், இந்த பூமிக்குரிய கூடாரம் ஒருவேளை எடுத்துக்கொள்ளப்பட்டால்... பாவத் தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசிக்கொண்டு உலகத்திற்கு வந்து, சுபாவத்தாலேயே பாவிகளாக இருந்த நம்மை தேவன் மீட்டு, நம்முடைய ஆத்துமாவை மீட்டுக்கொண்டு, ஒருபோதும் வியாதிப்படாத, சோதனைகளுக்கு அப்பாற் பட்ட, அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சரீரத்தை நமக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார், அப்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்போம். 5 இப்போது, பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையை நெருங்குகிறோம். அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவோ, அல்லது அதின் முத்திரைகளை உடைக்கவோ எந்த மனுஷனாலேயும் கூடாமலிருந்தது. ஆனால் உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர், அவர் பாத்திரராக இருந்தார். அவர் வந்து, அவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புஸ்தகத்தை வாங்கி, புஸ்தகத்தைத் திறந்து முத்திரைகளை உடைத்தார். இப்போதும், பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, நாங்கள் இப்போது வாசித்த இந்த வார்த்தைகளின் மேல் செயல்படுவாராக. நீர் இன்று பேசி, இங்குள்ள இந்தக் கூட்டத்தினர் மீது நேரடியாகச் செல்வீராக, எங்களுக்கு என்ன தேவையோ அதையே, அதாவது: விசுவாசத்தை பரிசுத்த ஆவியானவர் சபைக்குத் தருவாராக. ஆண்டவரே, இன்றிரவுக்கான ஒரு ஆராதனையை ஆயத்தப்படுத்தும். நாங்கள் இங்கே இருப்பதால் அல்ல, நீர் இங்கே இருப்பதினாலேயே, இன்றிரவு மிகச் சிறந்த ஆராதனையாக இருக்கட்டும். இந்தப் பிலதெல்பியா சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவே மிகப்பெரிய ஆராதனையாக இருக்கட்டும். பரலோகத்தின் பரிசுத்த தேவன், எங்களை எங்கேயாவது ஒரு பெரிய ஸ்டேடியத்திலோ அல்லது ஒரு அரங்கத்திலோ நிறுத்துகிற அளவிற்கு, சிகாகோவை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு அசைக்கக்கூடிய ஒரு அசைவாடுதல் இன்றிரவு புறப்பட்டுப் போகட்டும். ஆண்டவரே, அதை அருளுங்கள். இன்று மிகவும் அதிகமாய் கிரியை செய்யும். இப்போதே இருதயங்களை ஆயத்தப்படுத்தும். நிலத்தை உடைத்து, பச்சைக் கொடிகள், முட்கள், காரைகள் மற்றும் கசப்பான வேர்கள் அனைத்தையும் பிடுங்கி எறிந்து, பரிசுத்த ஆவியானவரை இறங்கப் பண்ணும், எனவே இன்றிரவு, தேவனுடைய தூதன் இந்த கட்டிடத்தின் மேல் ஒரு பெரிய கூட்டமாக அசைவாடட்டும், இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நன்றி, சகோதரரே. 6 இப்போது சில நிமிடங்களுக்கு வார்த்தையை நோக்கிச் செல்வோம்... நான் எனது கடிகாரத்தைக் கழற்றி வைக்கிறேன். கடிகாரம் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு... மேலும் நான் முடிந்தவரை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன். அதனால் நீங்கள் தயாராக போதிய நேரம் கிடைக்கும். இன்றிரவு ஜெபக் கார்டுகள் தேவைப் படுபவர்கள், முடிந்தால் இன்றிரவு ஆறு மணிக்கு இங்கே வந்து ஜெபக் கார்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்க என் மகன் சற்று முன்பு என்னிடம் கேட்டான்; வியாதியுள்ளவர்கள் மற்றும் தேவை உள்ளவர்கள், ஜெபக் கார்டுகளைப் பெற இன்றிரவு ஆறு மணிக்கு இங்கே வரவும். இப்போது, நம்முடைய வேதப்பகுதி இன்று... அல்லது இது நம்முடைய ஆண்டவரின் ஊழியத்தின் காலத்தில் இருந்த நேரத்திற்குச் செல்கிறது. தேவன் அவரோடு இருந்ததால் அவர் மிகவும் பிரபலமானார். அவர் ஒரு மனுஷனாக இருந்தார், நாம் அவரை விரும்பத்தக்கதான அழகு அவரிடம் இல்லை. அவர்-அவர் பார்ப்பதற்கு அவ்வளவு தோற்றமுடையவராக இல்லை, ஒருவேளை கொஞ்சம் பலவீனமாக தோற்றமளிக்கும் ஒரு நபராக இருக்கலாம். சவுலைப் போல ஆறு அடி, அல்லது ஏழு அடி உயரமுள்ள ஒரு பெரிய ஆளைப் போல அவர் அழகானவர் அல்ல என்று வேதம் சொல்கிறது. ஆனால் அவர் ஒரு சிறிய மனுஷனாக இருந்தார். 7 வேதம் சொல்லுகிறது, "அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக் கொண் டோம், ஆனாலும் அவர் தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவர் என்று நாம் எண்ணினோம்." ஆனால் தேவன் அவருக்குள் செய்துகொண்டிருந்த கிரியைகள் வியக்கத்தக் கவையாக இருந்தன, அவர் தேவனிடமிருந்து வந்தவர் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். நிக்கொதேமு என்னும் பெயர் கொண்ட, இரவிலே அவரிடம் வந்த பெரிய போதகர் கூட சொன்னார். அவர், "நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக் கிறோம், ஏனெனில் தேவன் ஒருவனுடனே கூட இராவிட்டால் நீர் செய்கிற இந்த அற்புதங்களை அவன் செய்யமாட்டான்" என்றார். அவர்கள் எந்தச் சந்தேகமுமின்றி இதை அறிந்திருந்தார்கள். இப்போது, அந்த நாட்களின் போதகர்கள் சொன்னார்கள், "அவர் ஒரு மனநல மருத்துவர். அவர் ஒரு-அவர் மனதை வாசிப்பவர். அவர் உங்கள் மனதை வாசிக்கிறார். அப்படித்தான் அந்த மக்களுக்கு என்ன குறை என்று அவர் தெரிந்துகொள்கிறார்; அவர் உங்கள் மனதை வாசிக்கிறார்" என்றார்கள். அவர் செய்தார். இயேசு மனதை வாசிப்பவராக இருந்தார். அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அல்லவா? ஆனால் அவர் அப்படித்தான் இருந்தார். அவர் அவர்கள் நினைவுகளை அறிந்தார். அது சரியா? சரி, மனதை வாசிப்பது என்றால் என்ன? பாருங்கள்? இங்கே உட்கார்ந்திருக்கும் ஒருவரைப் போல அல்ல, மூலையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறு பெண்களில் ஒருத்தியைப் போல, உங்கள் உள்ளங்கையை பிடித்துப் பார்ப்பது; அது அதைப் போல நடிக்க பிசாசு வைத்திருக்கும் ஒரு போலி. அது உண்மையான டாலருக்கு ஈடான கள்ள டாலர். புரிகிறதா? 8 தேவன் செய்த ஒவ்வொன்றுக்கும், பிசாசு ஒரு போலியானதை, ஏதோ ஒரு கள்ளத் தனமானதை உருவாக்கியிருக்கிறான். பாருங்கள்? இதனால்தான் கடைசி நாட்களில் இரண்டு ஆவிகளும் ஒன்றாகவே வருகின்றன, அவை சடங்காச்சாரமாகவும், அடிப்படைவாதமாகவும் இருந்து ஆவியானவரை முழுமையாக தவறவிடுகின்றன (பார்க்கிறீர்களா?), அது போலத் தான். இவற்றில் தீவிரமான பக்கத்தில் உள்ள சிலர் அதை வைத்துக்கொண்டு முற்றிலும் கொள்கைகளுக்குள் (isms) சென்று விடுகி றார்கள், ஆனால் சாலையின் நடுவிலேயே தேவனுடைய உண்மையான சபை பயணிக்கிறது, தேவனுடைய வல்லமையால் நிரப்பப்பட்டு நிற்கிறது. அங்கேதான் அது இருக்கிறது. இப்போது, நிச்சயமாக, தேவனிடம் உள்ள அனைத்திற்கும், சாத்தான் அதை போலியாகச் செய்ய ஏதோ ஒன்றை வைத்திருக்கிறான். பாருங்கள், அவன் அதிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்குகிறான். இயேசு அவர்களின் நினைவு களை அறிந்திருந்தார், ஆகவே அந்த நாட்களின் பெரிய பழமைவாதிகள், "இந்த ஆள் நாட்டிலேயே மிகச் சிறந்த குறிசொல்லுகிறவன். இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூல்" என்றார்கள். அது சரியா? இப்போது, போதகர்கள் அப்படித்தான் சொன்னார்கள். அந்த நாளின் சிறந்த பைபிள் போதகர்கள், "அவர் பெயல்செபூல்" என்றார்கள். 9 இப்போது, பிசாசு என்ன சொன்னான் என்று பார்ப்போம். பிசாசு சொன்னது, "இவர் தேவனுடைய குமாரன். நீர் யார் என்று எங்களுக்குத் தெரியும், நீர் தேவனுடைய பரிசுத்தர்" என்றது. அது சரியா? அந்த விஷயத்தில், ஊழியக்காரர்களை விட பிசாசு களுக்கு தேவனைப் பற்றிய அதிக அறிவு இருந்தது. அது சரியா? பவுலும் சீலாவும் அங்கே இருந்து, தேவனுக்காக சில பெரிய காரியங்களைச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு குறிசொல்லும் சிறுபெண் தினமும் வீதியில் ஓடிவந்து, பவுலுக்குப் பின்னால் சத்தமிட்டாள். "இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிற இந்த மனுஷர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரராயிருக்கிறார்கள்" என்று சொன்னாள். ஆனால் இங்கே இருந்த போதகர்கள், "இவர்கள் ஏமாற்றுக்காரர்கள். இவர்கள் உலகத்தைத் தலைகீழாக திருப்புகிறார்கள். இவர்கள் நல்லவர்கள் அல்ல" என்றார்கள். மற்றும்... ஊழியம் செய்யும் போதகர்கள் "அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என்று சொன்னார்கள். ஆனால் பிசாசு "அவர்கள் தேவனுடைய மனுஷர்கள்" என்று சொன்னது. எது சரி? பாருங்கள், பிசாசு சொன்னதுதான் சரி. அது சரியா? நிச்சயமாக அவன் சொன்னதுதான் சரி. ஆகவே பாருங்கள், அந்த மக்கள் கூட... நீங்கள் வார்த்தையின் மீது அதிக கவனம் செலுத்தலாம், நீங்கள் நினைக்கலாம், "ஓ, வார்த்தை, வார்த்தை." அது சரிதான். ஆனால் சுவிசேஷம் வார்த்தையோடு மாத்திரம் வரவில்லை; மாறாக, வார்த்தை ஜீவனாக மாறும் வரை, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும் விளக்கத்தினாலும் வந்தது. புரிகிறதா? கோதுமை உங்கள் கையில் இருப்பது நல்லதுதான், ஆனால் அதிலிருந்து உங்களுக்கு ஒருபோதும் விளைச்சல் கிடைக்காது. நீங்கள் அதைப் புதைக்க வேண்டும், அது புதிய ஜீவனைப் பெற அனுமதிக்க வேண்டும். அது சரியா? 10 இப்போது, வார்த்தை சரியானது; நிச்சயமாக இதுவே தேவனுடைய வழி. ஆனால் வெறும் வார்த்தை மட்டும், "எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது." நான் சொல்வது புரிகிறதா? இப்போது, ஆகையினால், சத்துரு தேவனைக்குறித்து சாட்சி கொடுக்க வேண்டியதாயிற்று. அவருடைய ஊழியத்தில் அவர் இங்கே புறப்பட்டுச் சென்றார், காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. அப்போது சபைகள் எல்லாம் அவருக்கு எதிராகக் கதவுகளை அடைத்துக்கொண்டு, "இப்போது, யாராவது அவர் சொல்வதைக் கேட்க அங்கே போனால், நாங்கள் உங்கள்... உங்கள் காகிதங்களை ஒப்படையுங்கள். நீங்கள் வெளியேற வேண்டும். இனி நீங்கள் இங்கு இருக்க முடியாது" என்று சொன்னார்கள். ஆனால் மார்த்தாள், மரியாள் மற்றும் லாசரு என்ற பெயருள்ள சில சகோதர சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் இயேசுவின் பேச்சைக் கேட்டார்கள், அவருடைய அற்புதங்களைப் பார்த்தார்கள், எனவே அவர்-பழமைவாதிகள் என்ன சொன்னார்கள், சபை என்ன சொன்னது, அல்லது அதைப் பற்றிய எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அவரை நம்பினார்கள், அவருடன் சென்றார்கள். அவர் தேவனுடைய மனுஷன் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அவர்கள் அவரை விசுவாசித் தார்கள். அதனால் அவர் பெத்தானியாவில்-அவர்களுடைய வீட்டில் தங்குவதற்கு வந்தார். 11 இப்போது, அவர் அங்கே-அவர்களுடன் தங்கியிருந்தபோது, அவருடைய ஊழியம் மிகவும் பெரிதாகிவிட்டது, அதனால் ஒரு நாள் அவர் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர்கள் அவரைச் சுற்றி அதிக கூட்டமாகக் கூடினார்கள், அந்த இடத்தைச் சுற்றி ஏராளமான மக்கள் இருந்தார்கள். மக்கள் ஆயிரக்கணக்கில் அவரிடம் வருவார்கள், ஆனால் அவர் அவர்களிடமிருந்து நழுவி, வேறு எங்காவது சென்றுவிடுவார் (பாருங்கள்?), பிதாவுடன் தனித்திருக்கவும், ஜெபிக்கவும் அவர் செல்வார். நகரங்கள் அவரை அழைக்கும், ஆனால் பிதா எந்த வழியில் வழிநடத்துவார் என்பதைப் பார்க்க அவர் தனியாக மலைக்குச் செல்வார். அவர் பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கே வந்தார். நாமும் இன்றைக்கு பிதாவின் வியாபாரத்திலேயே இருக்க வேண்டும் (அது சரிதான்.), சமூக அந்தஸ்துகள் மற்றும்-இதுபோன்ற காரியங்களில் அதிகம் அல்ல, பிதாவின் வியாபாரத்திலேயே இருக்க வேண்டும். 12 இப்போது, இந்த அற்புதமான இயேசுவை ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு, அவருடைய வருகையைக் கவனிப்போம். அவர் வருவதற்கு சற்று முன்பு, ஒரு... முதலாவதாக, அவருடைய வருகைக்கு முன்பு, ஒரு அறிவிப்பு இருந்தது. இன்று இருப்பதைப் போலவே சபையானது முழுவதுமாக பின்வாங்கி, எல்லாமே சீர்குலைந்து காணப்பட்டது. ஒருபுறம் பரிசேயர்கள், சதுசேயர்கள், ஆயக்காரர்கள் என்ற வரிசை, ஓ, அனைத்து வகையான கோட்பாடுகளும் சுற்றி இருந்தன. ஏன், ஒரு மனிதன் வந்து தான் ஒரு பெரியவன் என்று கூறிக்கொண்டு, நூற்றுக்கணக்கான மக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றான், அவர்கள் அழிந்து போனார்கள். அந்த கதை உங்களுக்குத் தெரியும். அதுபோல எல்லாமே... ஆனால் இறுதியாக அவர் வருவதற்கான நேரம் வந்தது, அவர்... மீதியானோர் அவருக்காக காத்திருந்தார்கள். ஒரு நாள்... கவனிப்போம். குழந்தை பெறும் வயதை வெகுவாகக் கடந்த ஒரு முதியவரையும், ஒரு பெண்ணையும் நான் காண்கிறேன். அவள் சொன்னாள், தன்னுடைய நிந்தையை நீக்கும்படி இத்தனை வருடங்களாக அவர்கள் தேவனிடம் ஜெபித் திருந்தார்கள், எந்த ஒரு எபிரெயப் பெண்ணுக்கும் குழந்தை பிறப்பது ஒரு கௌரவமாக இருந்ததால், அவள் குழந்தையைப் பெற முடியும் என்று எண்ணினாள். 13 இப்போது அதை எப்படி மாற்றி விட்டார்கள். ஒரு குழந்தையைப் பெறுவது என்பது இப்போது ஏறக்குறைய ஒரு அவமானமாகிவிட்டது. இப்போது, அது சரிதானே? நீங்கள் ஆமென் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. ஒரு பெண் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதை விட, ஒரு சிறிய தட்டையான மூக்குள்ள நாய்க்கு நூறு டாலர்கள் கொடுத்து, அதற்கு ஒரு தாயின் அன்பை இங்கு காட்ட விரும்புகிறாள். இப்போது, அதுதான் உண்மை என்று உங்களுக்குத் தெரியும். அதற்கு ஒரு சிறிய ஸ்வெட்டரைப் போட்டு வீதியில் நடமாட விடுகிறார்கள். நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று, இங்கே அருகில் இருப்பது, ஒரு நாய்களுக்கான மருத்துவமனைதான். எனக்கு அது புரிய வில்லை. என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. சரி. எப்படியோ, அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலானது. இப்போது, பாருங்கள். அப்பொழுது சகரியா ஒரு நீதிமான், ஒரு ஆசாரியன். அவர் தேவனுடைய ஆலயத்திற்கு வந்தார்; மக்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது தூபங்காட்ட வேண்டியது அவருடைய-அவருடைய முறை மையாக அங்கே இருந்தது. அப்பொழுது ஒரு நாள் அவர் தூபங்காட்டிக்கொண்டிருக்கும்போது, வாக்குத்தத்தத்தின் நேரம் நெருங்கி வந்தது. தேவன் பலிபீடத்தண்டைக்கு ஒரு தூதனை அனுப்பினார். நீங்கள் தேவதூதர்களை நம்புகிறீர்களா? [சபையார், "ஆமென்." என்று சொல்கிறார்கள்] ஆமாம், ஐயா. 14 கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒருவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாம், உங்களிடம் பேசும் அந்த நபரைப் பற்றி நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்." அவர், "அது கர்த்தர்" என்று சொன்னார். நான் சொன்னேன், "அது ஒரு தேவதூதன்." அவர், "நான் தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்பட்டவன்" என்று சொன்னார். அவர் கர்த்தர் அல்ல. அவர் ஒரு தேவதூதன். "ஓ," அவர் சொன்னார், "அதெல்லாம் தவறு." "சகோதரர் பிரன்ஹாம், பைபிளில் பழைய காலங்களில் தேவன் பேசினார்," என்று சொல்லி, "தானியேல் மற்றும் அவர்கள் எல்லோரும் இருந்தார்கள். ஆம், அவர்களுக்கு தேவதூதர்கள் இருந்தார்கள், அதுபோல பல காரியங்கள் இருந்தன, ஆனால் அது புதிய ஏற்பாட்டு உபதேசம் அல்ல" என்றார். மேலும் இந்த மனிதர், "பைபிள் எங்கே பேசுகிறதோ அங்கே நாங்கள் பேசுகிறோம், பைபிள் எங்கே அமைதியாக இருக்கிறதோ அங்கே நாங்கள் அமைதியாக இருக்கிறோம்" என்று சொன்னார். நான் நினைத்துக்கொண்டேன், "பைபிள் பேசிய பல விஷயங்களில் அவர் எவ்வளவு அமைதியாக இருந்தார்." நான் கேட்டேன், "தேவனுடைய தூதர்களை... நீங்கள் நம்ப வில்லை என்று என்னிடம் சொல்ல வருகிறீர்களா?" அந்த மனிதர் சொன்னார், "இல்லை, ஐயா. பரிசுத்த ஆவியானவரே சபையை வழி நடத்துகிறார்." நான் சொன்னேன், "அது சரிதான். ஆனால் தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்படுகிற பணிவிடை ஆவிகள் அவர்களுக்கு இருக்கிறார்கள்." அவர் சொன்னார், "புதிய ஏற்பாட்டில் இல்லை, சகோதரரே." நான் சொன்னேன், "ஓ, ஆம், புதிய ஏற்பாட்டிலும் உண்டு." அவர் சொன்னார், "பரிசுத்த ஆவியானவர் தான், தேவதூதர்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவர்..." நான் சொன்னேன், "பாருங்கள், நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்." நான் சொன்னேன், "மரியாளைச் சந்தித்தது தேவனுடைய தூதன்தான்." அவர் சொன்னார், "ஆம், ஆனால் அது பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பு. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு," அவர் சொன்னார், "அதிலிருந்து பரிசுத்த ஆவியானவர்தான்." 15 நான் சொன்னேன், "உண்மையாகவே பரிசுத்த ஆவியானவர் சபையை வழி நடத்துகிறார்; அது உண்மைதான். ஆனால் பாருங்கள்," நான் கேட்டேன், "பிலிப்பு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" நீங்கள் எல்லோரும் அதை நம்புகிறீர்களா? நிச்சயமாக, அவர் பெற்றிருந்தார். சரி, அவர் சமாரியாவிலே ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அவரிடம் பேசி, "காசாவுக்குப் போகிற வனாந்தர மார்க்கமாய் போ" என்று சொன்னது யார்? அது பரிசுத்த ஆவியானவரா? இல்லை, ஐயா. கர்த்தருடைய தூதன்தான் அவரிடம் பேசினார். அது சரியா? "காசாவுக்குப் போகிற வனாந்தர மார்க்கமாய் போ, பேசு." பாருங்கள், பேதுரு பரிசுத்த ஆவியான வரைப் பெற்றிருந்தார் என்று-எத்தனை பேர் நம்புகிறீர்கள்? பார்ப்போம். அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அன்று இரவு அவர் சிறையில் இருந்தபோது, யோவான் மாற்குவின் வீட்டில் அவருக்காக ஜெபக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ஜன்னலில் ஒரு வெளிச்சத்தைப் போலப் பிரகாசித்து, அவருக் காகக் கதவுகளைத் திறந்தது யார்? அது பரிசுத்த ஆவியானவரா? கர்த்தருடைய தூதன்தான். 16 பவுல் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தார் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? சரி, அவர் அங்கே கப்பலில் பதினான்கு பகலும் இரவும் இருந்தபோது, நிலவோ நட்சத்திரங்களோ இல்லாமல், நம்பிக்கை முழுவதும் அற்றுப்போனபோது, அவர் ஜெபிப்பதற்காக கப்பலின் அடித் தளத்திற்குச் சென்றார், பிறகு மேலே திரும்பி வந்தார். அவர், "திடமனதாயிருங்கள், நான் சேவிக்கிற தேவனுடைய தூதனானவர் நேற்றைய இராத்திரியிலே என்னருகே நின்று, 'பவுலே, பயப்படாதே' என்றார்" என்று சொன்னார். அது சரியா? கர்த்தருடைய தூதன்... வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் முழுவதும் ஒரு தேவதூதனின் சாட்சியினால் தான் எழுதப்பட்டது. "சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்." அது சரியா? யோவான் தேவதூதனை வணங்கும்படி தாழவிழுந்தான். தூதன், "இப்படிச் செய்யாதபடிக்குப் பார்" என்றார். இப்போது, இது ஜோசப் ஸ்மித் அல்ல. ஆனால் அவர் சொன்னார்... ஒரு உண்மையான தேவதூதன் ஆராதிக்கப்படுவதற்காக நிற்க மாட்டார். அது உங்களுக்குத் தெரியும். இல்லை, ஐயா. அவர், "தேவனைத் தொழுதுகொள்" என்றார். 17 மேலும் தேவனுக்கு இன்னும் தேவ தூதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மக்களைச் சந்திக்கிறார்கள்... தேவதூதர்களை ஆராதிப்பது அல்ல. மாறாக, தேவனின் பண்புகளைக் கொண்ட தூதர்கள், மக்கள் மூலமாக சபைக்கு ஊழியம் செய்ய அனுப்பப்படுகிறார்கள். ஓ, என் தேவனே. உண்மையான அப்போஸ்தல சபையின் ஆசீர்வாதத்திலிருந்து இன்று நாம் எவ்வளவு குறைவுபட்டிருக்கிறோம். அங்கே இருப்பதாக உரிமை கொண்டாடும் நாம், ஆசீர்வாதத்தின் பாத்திரத்தின் விளிம்பு களில் உள்ள ஆசீர்வாதங்களை முத்தமிட்டதாகக் கூறிக்கொள்ளும் நாம், எவ்வளவு குறைவு படுகிறோம். நாம் எப்படி நுரையின் மேல் குமிழிகளாக நடனமாடுகிறோம், ஆனால் அடித்தளம் என்னவென்று அறியாமல் இருக்கிறோம். அது உண்மை. இப்போது, நண்பர்களே, நான் இங்கே நிற்கும்போது, நான் பார்வையாளர்களுக்கு அல்ல, தேவனுக்கே பொறுப்பாளியாக இருக்கிறேன். அது சரிதான். என் வார்த்தைகள்... நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் லட்சக்கணக்கான மக்கள் கேட்டு கவனிக்கி றார்கள் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் என் முழு இருதயத்தோடும், தேவனுக்கு எந்தளவுக்கு உண்மையாய் இருக்க முடியுமோ அந்தளவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும். இன்று நான் சொல்கிறேன், நாம் இன்னும் மேற்பரப்பைக் கூட சொரண்டவில்லை. அது சரிதான். சபை கீழே இறங்கி வர வேண்டும். ஆஹா. நாம்... இது வாசிப்பது-இது வாசிப்பது, எழுதுவது மற்றும் கணக்குப் போடுவது போன்றது. கவனியுங்கள். இப்போது, இந்த தூதன் வந்தார், அவர் காபிரியேல். இப்போது, தேவன் சிறிய தூதர்களை அனுப்புகிறார் (அது சரிதான்.), ஒருவேளை அவர் இங்கே வரலாம். சில மக்கள் தாங்கள் பார்த்ததாக நினைக்கும் தேவதூதர்கள் மற்றும் இது போன்ற காரியங்களால் தங்கள் மனதை பெருமையால் உப்பச் செய்கிறார்கள். அது வெறும் போலியானது. 18 ஒரு மனுஷன் தேவனுடைய தூதனைக் கண்டிருந்து, தேவன் ஆணையிட்டதைச் சந்தித்து-அந்த தூதன் தேவனிடமிருந்து அவனுக்குக் கட்டளையிட்டிருந்து, அது தேவனால் அனுப்பப்பட்டிருந்தால், அது உண்மை என்பதற்கு கடைசிவரை சாட்சி பகரும். அதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆனால் அப்படி இல்லாவிட்டால், அது உண்மை அல்ல. நீங்கள் நம்பக்கூடிய ஒரு காரியம் இதுதான், "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்." அது உண்மை. 19 இப்போது, இதைக் கவனியுங்கள், இந்த தூதன் காபிரியேல். இப்போது, இந்த சிறிய தூதர்கள் வருகிறார்கள்; ஆனால் காபிரியேல் வருவதை நீங்கள் பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ, ஏதோ ஒரு பெரிய காரியம் நடக்கப் போகிறது என்பதற்கு நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள். காபிரியேல் தான் இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தவர். அது சரியா? மேலும், காபிரியேல் இரண்டாம் வருகையையும் அறிவிப்பார் என்று பைபிளில் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. அவர் தேவனுடைய எக்காளத்தை முழங்குவார் (அது சரியா?), கர்த்தருடைய வருகையை, தேவனு டைய வலதுபாரிசத்தில் நிற்கிற தேவனுடைய தூதனாகிய காபிரியேல் அறிவிப்பார். இப்போது, இந்த பெரிய காபிரியேல் இங்கே கீழே வந்தார், மக்கள் வெளியே ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, ஆசாரியன் இங்கே தனது தூபகலசத்தை அசைத்து, அதை எரித்துக்கொண்டிருந்தார். அவர் பலிபீடத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அவர் பலிபீடத்தின் பக்-பக்கவாட்டில் பார்த்தார், அங்கே அந்த பெரிய பிரதான தூதன் நின்றுகொண்டிருந்தார். அது ஆசாரியனைப் பயமுறுத்தியது. அவர் அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், காரியங்களைப் பற்றியும், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் பற்றி அவரிடம் எல்லாம் சொன்னார். "உம்முடைய ஆராதனையின் நாட்களுக்குப் பிறகு, உம்முடைய மனைவியாகிய எலிசபெத்திடம் வீட்டுக்குச் செல்லும். அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவீர்" என்று சொன்னார். ஏன், பாருங்கள். அந்த ஆசாரியன் இப்போது, "இது எப்படி ஆகும்? அவள் முதிர்வயதுள்ளவளாயிருக்கிறாளே" என்று கேட்டார். பாருங்கள்? 20 கர்த்தருடைய வெளிச்சம் முழுவதிலும் நடக்கிற நீதிமான்கள் இருக்கிறார்கள்; அப்படிப்பட்ட ஒரு வீட்டிற்குள்ளே தான் தேவன் வர முடியும். இப்போது, நீங்கள் உங்கள் வீட்டில் எல்லா வகையான-பார்ட்டிகள், பீயர், மற்றும் அனைத்தையும் பரிமாறிக்கொண்டிருந்தால், தேவன் ஒருபோதும் அங்கே உங்களைச் சந்திக்க மாட்டார். அது சரிதான். ஆனால் நீங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, ஜெபத்தோடும், திறக்கப்பட்ட பைபிளோடும், அதன்மேல் சில கண்ணீர்த் துளிகளோடும் தேவனுக்காக வாழும் ஒரு வீட்டை வைத்திருந்தால், தேவன் உங்களைச் சந்திக்க முடியும். அது சரிதான். ஏனென்றால் அவர் வருவதற்கான ஒரு வழியை நீங்கள் திறந்திருக்கிறீர்கள். அங்கேதான் அது நடந்தது. இப்போது, தேவன் சகரியா மற்றும் எலிசபெத்தின் ஜெபத்திற்குப் பதிலளித்தபோது, நிச்சயமாக அது அவரை மரண பயத்திற்கு உள்ளாக்கியது. இது நடக்கும் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர், "நான் தேவசமுகத்தில் நிற்கிற காபிரியேல், என் வார்த்தைகள் அதற்கேற்ற காலத்தில் நிறைவேறும்" என்றார். பின்னர் அவர் வெளியே திரும்பி வந்தார், மற்றும் மக்கள்... அவர் ஊமையானார். குழந்தை பிறக்கும் நாள் வரை அவர் ஊமையாக இருக்கப் போகிறார். பின்னர் சகரியா வெளியே வந்தபோது, மக்கள்... அவர் மக்களுக்கு சைகை காட்டினார். அவர் ஒரு தரிசனத்தையோ அல்லது ஏதோ ஒன்றையோ கண்டிருப்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் அவர் வீட்டிற்குச் சென்றார், எலிசபெத்து கர்ப்பவதியாகி ஆறு மாதம் தன்னை ஒளித்துக்கொண்டாள். அவள் ஒரு தாயாகப் போகிறாள். 21 பின்பு கவனியுங்கள், தேசத்திலேயே மிகவும் மோசமான பட்டணமாகிய நாசரேத்தில், ஒருவேளை சிகாகோவை விடவும் மோசமாக இருக்கலாம். பின்பு, ஏறக்குறைய நான் வந்த இடமான ஜெபர்சன்வில்லையைப் போல மோசமாக இருக்கலாம். பின்பு உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், இதோ, ஒரு நாள் ஒரு சிறிய கன்னிகை, சுமார் நாற்பத்தைந்து வயதுடைய ஒரு மனிதனுக்கு, சுமார் நான்கு குழந்தைகளையுடைய ஒரு விதவைக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள், அந்த கீழைத்தேச முறைப்படி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். ஒருவேளை அது ஒரு திங்கட்கிழமையாக இருக்கலாம். அவளது சலவை நீரை ஒரு ஜாடியில் அவர்கள் செய்வது போல தலைமேல் சுமந்து கொண்டு, நடந்துகொண்டிருந்தாள். திடீரென்று, அவள் முன்னே ஒரு பெரிய வெளிச்சம் வீசியது. அவள்... அந்தச் சிறு கன்னிகையை அது பயமுறுத்தியது. அவள் பார்த்தாள். அங்கே அவளுக்குப் பக்கத்தில் காபிரியேல் நின்று கொண்டிருந்தார். "அருள்பெற்றவளே, வாழ்க" அல்லது "நில்" என்றார். "ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்றார். அவளுடைய உறவினளாகிய எலிசபெத்து தன் முதிர்வயதிலே கர்ப்பவதியாயிருக்கிறாள் என்றும், ஒரு பிள்ளையைப் பெறப்போகிறாள் என்றும் அவளுக்குச் சொன்னார். மேலும் அவள் ஒரு புருஷனை அறியாமலேயே, ஒரு பிள்ளையைப் பெறப்போகிறாள் என்றும் சொன்னார். இப்போது, வேதவாக்கியங்களை மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் ஆராய்ந்து படித்த, ஏராளமான உதாரணங்களைக் கொண்டிருந்த அந்தப் போதகராகிய சகரியாவுக்கும் இவளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்: பழைய ஏற்பாட்டிலே சாராள், அன்னாள் போன்ற ஏராளமான உதாரணங்கள் இருந்தன. அவர்-அவர் அது அப்படியிருக்குமா என்று சந்தேகித்தார். ஆனால் இந்தச் சிறு பெண் சந்தேகிக்கவில்லை. அவள், "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது," என்றாள். என்ன ஒரு வித்தியாசம். 22 இப்போது, சில நேரங்களில் நீங்கள் உங்களையே மரத்துப் போகச் செய்யலாம். பைபிளை வாசிப்பது, ஒரு செய்தித்தாள் வாசிப்பது போலவே இருக்கிறது, அதில் நீங்கள் கொண்டிருக்கும் அதே அளவிலான விசுவாசத்தையே இதிலும் கொண்டிருக்கையில், உங்களை நீங்களே மரத்துப்போகச் செய்கிறீர்கள். தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் போது, அது அங்கே சொல்லியிருக்கி றபடியே அதை விசுவாசியுங்கள், தேவன் சொன்ன வார்த்தையின்படியே அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்போது, அவள் இதை வாசித்த வுடனேயே, அல்லது அவள் முன்னே இதைக் கண்டவுடனேயே, "நீ ஒரு குழந்தையைப் பெறப்போகிறாய்," என்று கர்த்தருடைய தூதன் சொன்னார். அவள் எதை விசுவாசிக்க வேண்டியிருந்தது என்று பாருங்கள். சரி, ஒருபோதும் நடக்காத ஒன்றை அவள் விசுவாசிக்க வேண்டியிருந்தது. சகரியா அப்படிச் செய்ய வேண்டியதில்லை... வேதவாக்கியங்கள் மூலமாக அப்படிப்பட்டவை பலமுறை நடந்திருந்தன. அவரிடம் ஏராளமான உதாரணங்கள் இருந்தன. ஆனால் மரியாள் முற்றிலும் சாத்தியமில்லாத, அதற்கு முன்பு ஒருபோதும் நடந்திராத ஒன்றை விசுவாசிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், அவள் அதைக் குறித்துத் தயங்கவில்லை; "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை. எனக்கு ஆகக்கடவது," என்று மட்டுமே அவள் சொன்னாள். அவள் தேவன் சொன்ன வார்த்தையின்படியே அவரை ஏற்றுக்கொண்டாள். இன்றைக்கும், உலகெங்கிலும் வீசிக் கொண்டிருக்கிற இந்த பிந்தைய எழுப்புதலின் மாபெரும் கூட்டங்களில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் குணமாக்கப் பட்டிருக்கிறார்கள், இப்போது இங்கேயே. இன்றைக்கே, இந்த நிமிடத்திலேயே, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் டஜன் கணக்கான, ஏராளமான மக்கள் தேவனுடைய வல்லமையால் இப்போது குணமாக்கப்படுகிறார்கள்; ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் ஏராளமான உதாரணங்கள். இருந்தபோதிலும், நாம் உட்கார்ந்துகொண்டு, "தேவனே, நீர் ஏன் இதைச் செய்வதில்லை," என்றும், "ஏன் அதைச் செய்வதில்லை?" என்றும் ஆச்சரியப்படுகிறோம். தேவன் சொன்ன வார்த்தையின்படியே அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். 23 மரியாள், "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை," என்றாள். அவள் சந்தோஷப்படத் தொடங்கினாள். அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருந்தார்; தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. நேற்றிரவு நான் அதைக் குறித்து ஏதாவது பேசினேன் என்று நினைக்கிறேன். அவள் ஜீவனை உணரும் வரை காத்திருக்க வில்லை. அவள் உறுதியாகும் வரை காத்திருக்கவில்லை. காணக்கூடிய எந்த அடையாளத்திற்காகவும் அவள் காத்திருக்க வில்லை. தூதன் சொன்னது சத்தியம் என்று அவள் விசுவாசித்தாள். அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். இதில் உள்ள பிரச்சனையே, நாம் தேவனை கேள்வி கேட்கிறோம். நாம் தேவனை கேள்வி கேட்டால், நம்மால் தேவனை விசுவாசிக்க முடியாது. விசுவாசமானது நம்பப்படுகிற வைகளின் உறுதியும், நீங்கள் காணாத, சுவைக்காத, உணராத, முகராத அல்லது கேட்காத காரியங்களின் நிச்சயமுமாயிருக்கிறது. ஆமென். இப்போது நான் சற்று ஆவிக்குரியவனாய் உணர்கிறேன். நான்... சரி. ஓ, தேவன் சொன்ன வார்த்தையின்படியே அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் கேட்டவுடனேயே சந்தோஷப்படவும் தேவனைத் துதிக்கவும் தொடங்கினாள். "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." அது சரியா? [சபையார், "ஆமென்" என்கிறார்கள்] "விசுவாசம் கேள்வியினாலே வரும்." 24 நீங்கள் விடுதலையாக்கப்படலாம் என்று சொல்லும் தேவனுடைய வார்த்தையை நீங்கள் கேட்டவுடனேயே, அதை விசுவாசியுங்கள். அதைக் குறித்து சந்தோஷப்படுங்கள். நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகு தேவன் அதற்கான ஆதாரத்தைக் காண்பிப்பார். ஆனால் முதலில் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்து பாவிகளுக்காக மரித்தார். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் சந்தோஷப்படத் தொடங்குகிறேன். தேவன் அதனாலே நீதியை நடப்பிக்கிறார். அவர் எனது சுகத்திற்காகத் தழும்புகளை ஏற்றார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். தேவன் எனக்காக சுகத்தை நடப்பிக்கிறார். புரிகிறதா? நான் விசுவாசித் தவுடனேயே. நான் விசுவாசிக்கும் வரை அவரால் எனக்கு உதவ முடியாது. நான் முதலில் அதை விசுவாசித்து அறிக்கை செய்ய வேண்டும், அப்போது தேவன் தமது வார்த்தைக்குக் கட்டுப்பட்டவராக இருக்கிறார். அவர் சர்வவல்லமையுள்ள தேவனானால், அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிட்டால், அவர் சர்வவல்லமையுள்ள தேவன் அல்ல. அங்கே அது இருக்கிறது. சரி. கவனியுங்கள். இந்த சிறுவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட ஒரு நபர்? தேவன் தமது வார்த்தையைக் காத்துக்கொள்கிறார், தேவன் எதையும் செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், தேவன் அதைச் செய்வார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டு வழிநடத்தப்பட்டபோது, அவர்கள் வனாந்திரத்தின் வழியாய் பிரயாணம் செய்கையில் தேவன் அவர்களைப் பராமரிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார். அவர் அவர்களைப் பராமரிப்பதாக தேவன் சொன்னார், அவர் அதைச் செய்தார். பாதை எங்கே சென்றாலும் சரி, தேவனுடைய பாதையில் எந்த எதிரி வந்தாலும், அது விலகிக்கொண்டது. அவர்கள் செங்கடலுக்கு வருவதை என்னால் பார்க்க முடிகிறது. தேவன் தமது வரைபடத்தை வரைந்து வைத்திருந்தார், அவர் அவர்களை எந்த வழியாகக் கொண்டு செல்லப் போகிறார் என்று. அவர்கள் செங்கடலுக்கு நேராக முன்னேறு வார்கள்: அதைக் கடக்க வழியே இல்லை. இங்கே பார்வோனின் சேனை, ஒரு பக்கம் மலைகள், இங்கே பார்வோனின் சேனை, அவர்களுக்கு முன்னால் செங்கடல். மோசே தன் கைகளை உயர்த்தினார். தேவன் கீழே பார்த்தார் என்று சங்கீதம் 72 சொல்கிறது. கடலின் அடிமட்டத்தின் வழியாக அந்தப் பாதை செல்வதை அவர் கண்டார். வாக்குத்தத்தம் தேவைப்படுகிறவர்களாக, தேவன் சொன்ன வார்த்தையின்படியே அவரை ஏற்றுக் கொண்டவர்களாக, அவருடைய பிள்ளைகள் அங்கே இருந்தார்கள். 25 தேவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் வழியாக கோபமான கண்களோடு கீழே பார்த்தார். அவர் அப்படிச் செய்தபோது, கடல்-கடல் பயந்து போய் அப்படிப் பின் வாங்கி, ஒரு உலர்ந்த பாதையை உருவாக்கியது, இஸ்ரவேலர் உலர்ந்த தரைவழியாய் நடந்து சென்றார்கள். தேவன் சொன்ன வார்த்தையின் படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் செங்கடலைக் கடந்தபோது, அந்த விருத்தசேதனமில்லாதவர்கள், இன்றைய போலியாக விசுவாசிப்பவர்களைப் போல, தங்களைப் போலியானவர்களாகக் காட்டிக் கொண்டு அப்படிச் செய்ய முயன்றவர்கள் அழிந்து போனார்கள். மறுபக்கத்தில் உள்ளவர்கள் அழிவதைக் கண்டபோது ஒரு பெரிய ஜெயம் வந்தது. மிரியாம் ஆவிக்குள் நிரம்பி, ஒரு தம்புருவை எடுத்துக்கொண்டு, நடனமாடிக் கொண்டே ஆற்றங்கரைக்குச் சென்றாள். கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? ஆவிக்குள்ளாய் நடனமாடுவது, தம்புரு வாசிப்பது. இஸ்ரவேலின் குமாரத்திகளும் அவளைப் பின்பற்றி, தம்புருக்களை வாசித்து ஆவியிலே நடனமாடினார்கள். அது ஒரு பழைய காலத்து எழுப்புதலாக இல்லாவிட்டால், எனக்கு வேறு எதுவும் தெரியாது: ஜெயம். பின்னாலே மரித்தவர்கள் கிடந்தார்கள், அவர்களைத் தொந்தரவு செய்த காரியங்கள் அனைத்தும்... 26 உங்களைத் தொந்தரவு செய்த அந்தப் பழைய வியாதி, அந்தப் பழைய வயிற்று வலி. ஓ, ஆச்சரியமே! அந்தப் பழைய புகைப் பிடிக்கும் பழக்கம், அந்தப் பழைய பாவம், உங்களைப் பின்னுக்குத் தள்ளி உங்களைத் தடுத்து நிறுத்திய காரியங்கள்; அங்கே நீங்கள் இயேசுவின் இரத்தத்தின் வழியாக நடந்து செல்லும்போது, தேவன் உங்கள் ஆத்துமாவைச் சுத்திகரித்திருக்கும்போது, அங்கே இன்னொரு நடன விருந்து நடைபெறும். பரலோகத்தின் சந்தோஷத்தின் மணிகள் உங்கள் இருதயத்தில் துள்ளிக்குதிக்கும். அங்கே தலைவராகிய மோசே மிகவும் உற்சாகமடைந்தார். ஆம். அவர் தன் கைகளை காற்றில் உயர்த்தி, ஆவியிலே ஒரு பாடலைப் பாடினார். ஒரு முகாம் கூட்டத்தின் நேரம் போலத் தோன்றுகிறது அல்லவா? ஆம், ஐயா. 27 இப்போது, அவர்கள் தங்களுடைய எல்லாப் பயிர்களையும் விட்டுவிட்டு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் பிசைந்த மாவு அடங்கிய ஒரு சிறிய கூடையைத் தங்கள் தலைக்குமேல் சுமந்து வந்திருந்தார்கள், அது உண்ணப்பட்டுவிட்டது: அப்பம் இல்லை, சாப்பிட எதுவும் இல்லை. "தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்தார்." சரி. அவர்கள் அன்று இரவு உறங்கச் சென்றார்கள். மறுநாள் காலையில் விழித்தெழுந் தார்கள், தரை முழுவதும் மன்னா நிறைந்திருந்தது: அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் வழங்கினார். தரை முழுவதும் மன்னா கிடந்தது. அவர்கள் வெளியே சென்று அதைப் பொறுக்கினார்கள். அவர்கள் அதைச் சாப்பிடத் தொடங்கியபோது, அது தேனைப் போல ருசித்தது. ஓ, ஆச்சரியமே. நீங்கள் எப்போதாவது அதில் கொஞ்சத்தை, அந்த மன்னாவில் கொஞ்சத்தைச் சாப்பிட்டிருக்கிறீர்களா? என்ன ஒரு அழகான நிழலாட்டம். இப்போது, அவர், "இன்றைக்கு, சனிக்கிழமை போதுமானதை எடுத்துக் கொள்ளாதீர்கள். சனிக்கிழமை மட்டும் ஓய்வுநாள் முழுவதும் நீடிக்க," என்றார். அவர், "இன்று சாப்பிடுவதற்குப் போதுமானதை மட்டும் இன்றைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்; நாளைக்குப் புதிதாகக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்," என்றார். இன்றைக்கு மக்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை சார்ந்து இருக்க முயற்சிக்கிறார்கள். அந்த மன்னாவுக்கு என்ன ஆனது என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரே இரவில் அதில் புழுக்கள் உண்டாயின. 28 அதுதான் நமது பெந்தெகோஸ்தே அனுபவங்களில் பலவற்றிலும் உள்ள பிரச்சனை, நாம் எங்கேயோ கடந்த காலத்தில் நடந்த ஒன்றைச் சார்ந்து இருக்கிறோம், அதில் புழுக்கள் உண்டாகி, அது கெட்டுப்போகிறது. இன்றைக்கு நிலைமை என்ன? இதுவே அந்த நாள். இதுவே அந்த நேரம். சரி. இப்போது, நான் அதைக் கவனிக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது... அது, "கன்மலையின் தேனைப் போல ருசிக்கிறது" என்று சொல்லப் பட்டிருக்கிறது. "அது எவ்வளவு இனிமையாக இருந்தது," என்று தாவீது சொன்னார். தேனில் தேவனுக்குப் பிடித்தமான ஏதோ ஒன்று இருக்கிறது. கவனியுங்கள், தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்ததால், மேய்ப்பர்கள் வழக்கமாகத் தங்கள் பக்கவாட்டில் ஒரு சுருக்குப்பையைச் சுமந்து செல்வார்கள். இந்த சுருக்குப்பையில் அவர்கள் தேனை வைப்பார்கள். அவர்களின் ஆடுகள் வியாதிப்படும்போது, அவர்கள் இந்தத் தேனைக் கொஞ்சம் எடுத்து, ஒரு பாறையின் மீது தடவுவார்கள். வியாதிப்பட்ட ஆடு அங்கே சென்று, இந்தப் பாறையை நக்கத் தொடங்கும், தேனை நக்கும்போது, அது பாறையிலிருந்து சுண்ணாம்பை எடுத்துக் கொள்ளும், அந்தச் சுண்ணாம்பு வியாதிப்பட்ட ஆட்டைக் குணமாக்கியது. 29 இன்றைக்கு எவ்வளவு அழகான ஒரு நிழலாட்டம். கேளுங்கள், நண்பர்களே, என்னிடம் ஒரு சுருக்குப்பை முழுவதும் தேன் இருக்கிறது, அதை நான் கிறிஸ்து இயேசுவாகிய அந்தக் கென்மலையின் மேல் வைக்கப் போகிறேன், வியாதிப்பட்ட ஆடுகளாகிய நீங்கள் இப்போது நக்கத் தொடங்குங்கள், நீங்கள் நிச்சயமாக குணமடைவீர்கள் என்பது உறுதி. கல்வாரியிலிருந்து நக்குங்கள், எந்த மனிதனின் கரத்திலிருந்தும் அல்லது ஏதோ ஒரு மூட நம்பிக்கையிலிருந்தும் அல்ல, கல்வாரி யிலிருந்து, பாப்டிஸ்ட் சபையிலிருந்தோ, மெத்தடிஸ்ட் சபையிலிருந்தோ, பிரஸ்பிடேரியன் சபையிலிருந்தோ, பெந்தெகோஸ்தே சபையி லிருந்தோ அல்ல; ஆனால் அநாதி கன்மலையாகிய கல்வாரியிலிருந்து நக்குங்கள். அதிலிருந்து நக்குங்கள். அவர்கள் குணமடைந்தார்கள். வியாதிப்பட்ட ஆடுகள் நக்க வேண்டிய ஒரு காலம் எப்போதாவது இருந்திருக்குமானால், அது இன்றைக்குத்தான். கவனியுங்கள், தேவன் சொன்னார், "இப்போது, நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: வெளியே சென்று பெரிய ஓமர் அளவுகளில் அதை எடுத்து, அதைப் பின்னால் வைத்து, பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு செல்லுங்கள், இனிவரப்போகும் தலைமுறைகள் எல்லாம், அவர்கள் உள்ளே வரும்போது... ஆசாரியத்து வத்திற்கு உட்பட்டிருந்த, ஆசாரியத்துவத்திற்குள் வருகிற ஒவ்வொரு மனிதனும், உள்ளே சென்று அந்த அசல் மன்னாவிலிருந்து ஒரு வாய் எடுத்துச் சாப்பிடலாம். பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட்ட அது கெட்டுப்போகவில்லை. அது தன்னுடைய முழு மதிப்பையும் தக்க வைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஆசாரியனும், ஆசாரியனாக நியமிக்கப்பட்ட பிறகு, திரைக்கு வரலாம், பின்பு முதல் நாளாகிய அந்த நாளில் மன்னா பொழிந்தபோது கிடைத்த அசல் மன்னா விலிருந்து ஒவ்வொருவரும் ஒரு வாய் எடுத்துச் சாப்பிடலாம். அப்போதுதான் தேவன் அவர்களைச் சென்று முதல் மன்னாவிலிருந்து ஒரு ஓமர் அளவு எடுத்து வர அழைத்தார். 30 பெந்தெகோஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியானவருக்கு என்ன ஒரு அழகான நிழலாட்டம். தேவன் சபையை இயற்கையாக வனாந்திரத்தின் வழியாய் வழிநடத்தியது போல, இப்போது தேவன் தமது சபையை ஆவிக்குரிய பிரகாரமாக வழிநடத்துகிறார். நமது மன்னா, நமக்கு ஜீவனளித்து ஆதரிக்கும் ஆதாரம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக வருகிறது. அப்போஸ்தலர்கள் எல்லாவித பயத்தையும் சந்தேகத்தையும் கடந்து, மேல் அறையில் கூடிவந்தவுடனேயே, தேவன் அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுத்தார். அது கீழே பொழிந்தபோது, அது பரலோகத்திலிருந்து தேவனிடமிருந்து நமக்கு வந்த மன்னா, பலத்த காற்று அடிப்பதுபோல, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள் பிரிக்கப்பட்டு அவர்கள்மேல் அமர்ந்தன; கட்டடத்தை விட்டு வெளியே வீதிகளுக்குச் சென்று, பிரசங்கிக்கவும் சாட்சிகூறவும் தொடங்கினார்கள், தேவன் அற்புதங்களை நடப்பித்தார். அது சரியா? நமது மன்னா... இப்போது, தேவன் அதைக் கொஞ்சம் எடுத்து வைத்தாரா? அப்போஸ்தலர் 2:30 மற்றும் 38-ல் பேதுரு சொன்னார், அவர், "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது," என்றார். 31 அப்படியானால் இன்றைக்கு, தேவன் இன்னும் அழைத்துக்கொண்டிருக்கிறார் என்றால், இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து எடுக்கப் பட்ட இரத்தத்தால் நிரப்பப்பட்ட ஊற்றுக்கு வருகிற ஒவ்வொரு மனிதனும் அல்லது பெண்ணும், தேவனுடைய ராஜ்யத்திலே ஒரு ஆசாரியனாக அல்லது ஒரு பிள்ளையாக, மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையாக மாறும்போது, பரிசுத்த ஆவியானவரின் அசல் ஞானஸ்நானத்தைப் பெற உரிமை உண்டு, அது ஒரு வாய் அல்ல, பெந்தெகோஸ்தே நாளன்று பொழிந்த அதே வல்லமையால் ஆத்துமா முழுவதும் நிரம்புவதாகும். நான் உணர்ச்சிவசப்படவில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். சகோதரனே, நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இன்றைக்குச் சபைக்குத் தேவையானது, நகரத்திற்கு ஒரு புதிய மேயரோ, அல்லது ஒரு புதிய ஜனநாயகக் கட்சியோ, அல்லது புதிய குடியரசுக் கட்சியோ அல்ல. அதற்குத் தேவையானது ஒரு பழைய காலத்து, தேவனால் அனுப்பப்பட்ட, பரிசுத்த ஆவியின் எழுப்புதலும், பைபிள் சொல்லும் பரிசுத்த ஆவியானவர் திரும்பவும் சபைக்குள் வருவதுமேயாகும். அதுவே அதற்குத் தேவை. எவ்வளவு அற்புதம். ஆம், ஐயா. அவர்கள் தாகமாக இருந்தபோது, அவர்கள் கன்மலையை அடித்தார்கள். அவர்கள் வனாந் திரத்தில்-கன்மலையிலிருந்து குடித் தார்கள். அவர்களுக்குத் தேவை இருந்தபோது, தேவன் தேவையைச் சந்தித்தார். கிறிஸ்து பூமிக்கு வரத் தயாராக இருந்தபோது, தேவன் ஏற்பாடுகளைச் செய்தார். 32 இப்போது, சிறிய மரியாளைப் பாருங்கள். இங்கே அவள் வனாந்திரத்திற்குச் சென்று, மலைகளுக்கு மேலே தன் உறவினளாகிய எலிசபெத்தைப் பார்க்கச் செல்கிறாள். இயேசுவும் யோவானும் பாதி-இரண்டாவது உறவினர்கள். மரியாளும் எலிசபெத்தும் முதல் உறவினர்கள். தன் உறவினளின் ஐக்கியத்தை அனுபவிப்பதற்காக, அவள் மலைகளுக்கு மேலே சென்றாள். அதைத்தான் நாம் இன்றைக்குச் செய்ய வேண்டும். வெறும்... எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எதையும் வெளியே கொடுக்காத சவக்கடல்தான் உலகத்திலேயே மிகவும் செத்த பொருளாகும். அல்லது நாம் ஒரு கூட்டத்திற்கு வந்தால், தேவன் நமது ஆத்துமாவை மகிமையால் நிரப்பினால், நாம் ஒரு நாளைக்கு ஐம்பது பேரிடம் சொல்ல வேண்டும், எங்கும், ஒவ்வொரு நாளும் மற்றொரு ஐம்பது பேரிடம், மற்றொரு ஐம்பது பேரிடம் சொல்ல வேண்டும். வெளியே கொடுங்கள். அது நீர்த்தொட்டியைச் சுத்தமாக வைத்திருக்கிறது. சரி. கவனியுங்கள். பிறகு மலைகளுக்கு மேலே அவர்கள் சென்றார்கள். அவள் நெருங்கி வருவதை என்னால் பார்க்க முடிகிறது. அந்தப் பெண் ஓடிவருவதை நான் பார்க்கிறேன். அவள் அங்கே அமர்ந்திருக்கிறாள். இதை நாம் கொஞ்சம் நாடகமாகப் பார்ப்போம். அவள் அங்கே அமர்ந்துகொண்டு, பின்னல் வேலை, உங்களுக்குத் தெரியும், அல்லது குரோஷே வேலை, அல்லது அந்த நாட்களில் பெண்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மரியாள் வருவதை அவள் கண்டாள்; அவள் தன் குரோஷே வேலையையும் பின்னல் வேலையையும் கீழே போட்டாள். அவள் வேகமாக மேலே சென்றாள், அவளைத் தன் கைகளில் அள்ளி, அவளைக் கட்டிக்கொண்டு, முத்தமிட்டு, "ஓ, மரியாளே, உன்னைப் பார்ப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்," என்றாள். ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள அன்பு, அதெல்லாம் இப்போது போய்விட்டது. இப்போது, அது உண்மையல்லவா? எல்லாம் போய்விட்டது... 33 ஏன் இன்றைக்கு, பத்திரிகையில் படிக்கும் வரை உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட்டார் என்று கூட உங்களுக்குத் தெரிவதில்லை. அது சரியா? அந்த நாட்களில் விவசாயிகளிடமிருந்து, மற்ற விவசாயிகளி டமிருந்து பணத்தையும் மற்றவற்றையும் நம்மால் கடனாக வாங்க முடிந்ததை நான் நினைவுகூருகிறேன். இப்போது அதைச் செய்து பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் பிணையம் தேவை. அது ஒரு வெட்கக்கேடு. அன்பு, உலகம் இன்றைக்கு எதற்காக மரித்துக்கொண்டிருக்கிறதோ, அது அன்புக்காகத் தான். உங்கள் உபதேசத்தில் நீங்கள் அவ்வளவு பழமைவாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. யாரோ ஒருவர், ஒருவேளை, இங்கேயுள்ள நம்மில் இருவர் கூட ஒரே காரியத்தை ஒப்புக்கொள்ள மாட்டோம், ஆனால் இதை நாம் ஒப்புக்கொள்ளலாம்: பரிசுத்த ஆவியானவரால் தேவனுடைய அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது என்பதை. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவோம். இயேசு, "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்," என்றார். 34 இப்போது, இங்கே சமீபத்தில், நான் புளோரிடாவில் இருந்தேன். நான் இதைக் கடந்து செல்ல விரும்புகிறேன். மிஸ்டர் பாஸ்வொர்த், உங்களில் பலருக்கு அவரைத் தெரியும், முதிர்ந்த தந்தை பாஸ்வொர்த், எஃப். எஃப். பாஸ்வொர்த், பல வருடங்களுக்கு முன்பு இங்கே பெரிய கூட்டங்களை நடத்தினார். சிகாகோவில் உள்ள முதிர்ந்த தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் சிலருக்கு அவரை நினைவிருக்கலாம். நாங்கள் அங்கே சென்றிருந்தபோது, அவர் வெறும்... அவர் என் கூட்டத்திற்கு முதன்முதலில் வந்தபோது, நாங்கள் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தோம்... நான் அங்கே சென்றிருந்தேன், ஒரு சின்னப் பையனோடு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். அவர்கள் கொண்டிருந் தார்கள்... "அவர் முற்றிலும் மூழ்கிப் போகும் நிலையில் இருந்தார்," என்று அவர் சொன்னார். அதனால் கீழே சென்று ஒரு கூட்டத்தை நடத்தினோம், அன்று இரவு ஒரு 'டச்சஸ்' வந்தாள். நீங்கள் அவர்களை அப்படித்தான் அழைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியும், அந்தப் பெண்களில் ஒருவர், அது உயர் சமுதாயம். ஆகவே சகோதரர் பாஸ்வொர்த், "சகோதரர் பிரன்ஹாம், இங்கே உள்ள இந்தச் சொத்துக் களுக்கெல்லாம் சொந்தக்காரியான இந்த டச்சஸ் உங்களைப் பார்க்க விரும்புகிறார்," என்றார். நான், "சரி, இப்போது என்னால் முடியாது," என்றேன். 35 அன்று இரவு நாங்கள் கூடாரத்தின் வழியாகச் சென்றபோது, அந்தச் சிறிய ஜெப அறையின் பின்புறத்தில், இதோ அவள் அங்கே நின்றுகொண்டிருந்தாள். ஓ, சகோதரனே, குறைவான ஆடைகளும் அதிகப்படியான ஒப்பனையும் அணிந்திருந்தாள், உங்களுக்குத் தெரியும். இரண்டு பெரிய காதணிகள் தொங்கிக்கொண்டிருந்தன, உங்களுக்குத் தெரியும், அது பிசாசுக்கான அங்கவடிகளைப் போலக் காணப்பட்டது, சேணம் அவளது கழுத்தின் நடுவில் சரியாகப் பொருந்தியிருந்தது, அது நேராக கீழே சவாரி செய்துகொண்டிருந்தது. அங்கே அவள் அமர்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு மூக்குக் கண்ணாடி வைத்திருந்தாள், அவள் அதைப் பிடித்திருந்தாள். நான் அந்தப் பெண்ணைக் கேலி செய்யவில்லை, ஆனால் ஒரு நல்ல துப்பாக்கியில் அடைக்கத் தேவையான துணிகூட அவளிடம் இல்லை. ஒரு குச்சி போன்ற ஒன்றில் இருந்த இந்தக் கண்ணாடியுடன் அவள் அங்கே நின்றிருந்தாள், உங்களுக்குத் தெரியும், அதை இப்படிப் பிடித்தபடி நின்றிருந்தாள். அவள், "நீங்கள் டாக்டர் பிரன்ஹாம் தானா?" என்றாள். நான், "இல்லை, அம்மா," என்றேன். அவள் சொன்னாள்... நான் சொன்னேன், "நான் சகோதரர் பிரன்ஹாம்." அவள், "சரி, உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்றாள். 36 சரி, அந்தப் பெண் என்ன பேசுகிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கையை நீட்டி அந்தப் பெரிய-கொழுத்த கையைப் பிடித்தேன், அதில் சுமார் நாற்பது மோதிரங்கள் இருந்தன, எனக்கு அப்படித் தெரிந்தது. நான் அதைப் பிடித்தேன். நான் சொன்னேன், "அதை கீழே வையுங்கள், அப்போதுதான் நான் உங்களை மீண்டும் பார்க்கும்போது எனக்குத் தெரியும்." ஆம். தங்களை மிகவும் உயர்வாகக் காட்டிக்கொள்கிறார்கள். அவள் என்னவாக இருந்தாள்? வெளியே, அங்கே உள்ள ஆறு அடி மண். அதுதான் சரி. ஓ, இன்றைக்கு நிலைமை அப்படித்தான் இருக்கிறது. மக்கள் சகலவிதமான ஊழல் களிலும் காரியங்களிலும் தங்கள் ஆத்துமாக் களைக் குளிப்பாட்டும்போது, நீங்கள் எப்படி வேறு எதையும் எதிர்பார்க்க முடியும். "இனத்தை இனம் சேரும்." வெளியே மிகவும் அழகாக இருக்கும் சில பறவைகள் பிணந்தின்னும் கழுகுகள் என்பது உங்களுக்குத் தெரியும். அது சரி. சரி, அவர்கள் வெளிப்பகுதியைக் கவனிக்காவிட்டால், உள்ளே இருப்பதுதான் முக்கியம். அது சரி. சரி. அங்கே, மரியாள் ஓடிச் சென்று சந்தித்தாள்... மரியாள் சென்றாள்...? எலிச பெத்தை, அவள் அவளைக் கட்டிக்கொண்டாள். அவள், "ஓ, என் ஆச்சரியமே, உனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை அறிந்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்," என்றாள். அவள், "ஆம், எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது. அது உண்மைதான்," என்றாள். மேலும் அவள், "உனக்குத் தெரியுமா, கர்த்தர் எனக்கும் தரிசனமானார்," என்றாள். புரிகிறதா? விவரிப்பதற்கு அவளிடமும் ஒரு ஆசீர்வாதம் இருந்தது. "கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, எந்தப் புருஷனையும் அறியாமலேயே நான் ஒரு குழந்தையைப் பெறப்போகிறேன் என்றும், நான் அவருக்கு இயேசு என்று பேரிடுவேன் என்றும் என்னிடம் சொன்னார்," என்றாள். 37 நமக்குத் தெரிந்தவரை, சிறிய யோவானுக்கு அதுவரை ஜீவன் உண்டாக வில்லை. அவளுக்குப் பயமாக இருந்ததாக எலிசபெத்து சொன்னாள். அவளுக்கு ஆறு மாதங்கள் ஆகியிருந்தது, பின்பு குழந்தையோடு, குழந்தையோடு, ஜீவன் இல்லை. அது இயல்புக்குக் குறைவானது. சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் என்றால் அது முற்றிலும் இயல்புக்குக் குறைவானது. ஆனால் இங்கே ஆறு மாதங்கள் ஆகியும், ஜீவன் இல்லை. மரியாள் "இயேசு" என்ற நாமத்தைச் சொன்னவுடனேயே, சிறிய யோவான் ஜீவனைப் பெற்றான், தன் தாயின் கர்ப்பத்தில் மகிழ்ச்சியால் துள்ளத் தொடங்கினான். மனுக் குலத்தின் உதடுகள் மூலமாகப் பேசப்பட்ட இயேசு கிறிஸ்து என்னும் நாமம், முதல் முறையாக செத்த குழந்தைக்கு ஜீவனைக் கொண்டு வந்ததென்றால், மறுபடியும் பிறந்த சபைக்கு அது என்ன செய்ய வேண்டும்? அல்லேலூயா. ஒரு வியாதிப்பட்ட நபருக்கு அது என்ன செய்ய வேண்டும்? "இயேசு" என்னும் அந்த நாமம் ஒரு செத்த குழந்தைக்கு ஜீவனைக் கொண்டு வந்தது. 38 யோவான் தன் தாயின் கர்ப்பத்திலேயே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றான், அல்லது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றான் என்றும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டுப் பிறந்தான் என்றும் பைபிள் சொல்கிறது. அல்லேலூயா. அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். சந்தோஷத்தைப் பெற்று, குதிக்கவும் துள்ளவும் தொடங்கினான். அவனுடைய தாயின்மேல் பரிசுத்த ஆவியானவர் வந்தார், அவள் தீர்க்கதரிசனம் சொன்னாள். ஓ, என் ஆச்சரியமே. தேவனுடைய ராஜ்யத்தில் குறைவுபடுவதைப் பற்றிப் பேசுகிறீர்களா? ஆம், ஐயா. அநேக நாட்கள் அவளுடன் தங்கியிருந்த பின்பு மரியாள் திரும்பிச் செல்கிறாள். சிறிய யோவான் பிறந்தபோது அவனைப் பாருங்கள். "இப்பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ?" "சரி, நாம் இவனை வேதசாஸ்திரப் பள்ளிக்குத்தான் (seminary) அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன்," அல்லது செமட்டரி (கல்லறை), நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அது. இரண்டும் செத்த இடம்தான். 39 ஒரு வேதசாஸ்திரப் பள்ளிப் போதகர் ஒரு செயற்கைக் கோழிக் குஞ்சை எனக்கு நினைவூட்டுகிறார். ஒரு சிறிய செயற்கைக் கோழிக் குஞ்சு இயந்திரத்தனமாக வெளியே வருகிறது; அந்தச் சிறிய குஞ்சு தாய்க்காகக் கீச் கீச் என்று கத்துகிறது, ஆனால் போவதற்குத் தாய் இல்லை. அது சரியாக ஒரு இன்குபேட்டர் போதகரைப் போலவே இருக்கிறது. அவருக்கு வாசிக்கத் தெரியும், எழுதத் தெரியும், கணிதம் தெரியும், எப்படிச் சரியாக நிற்பது, தன் தலையைத் தாழ்த்துவது, சாகும் கன்றுக்குட்டியைப் போல "ஆமென்" என்று சத்தமிடுவது எப்படிக் என்று தெரியும். ஆனால் ஒரு எகிப்திய இரவைக் குறித்து ஒரு ஹோட்டன்டோட்டுக்கு (Hottentot) எந்தள வுக்குத் தெரியாதோ அதே அளவுக்கு தேவனைப் குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது. அதுதான் சரி. அது உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதற்கு "ஆமென்" என்று சொல்லாமல் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. அது சரி. ஓ, என் பையனுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை, அவன் கிறிஸ்துவை அறிய வேண்டும், பாவத்தின் முழுமையான மன்னிப்பைப் பெற்றிருக்க வேண்டும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லேலூயா. உடைத்த பட்டாணிக்கும் காபிக்கும் வித்தியாசம் அவர்களுக்குத் தெரியாது. அவன் கிறிஸ்து வையும் பாவமன்னிப்பையும் அறிந்திருக்கும் வரை அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. 40 ஒன்பது வயதுடைய இந்தச் சிறிய பையனைப் பாருங்கள், அவனுக்குள் ஏதோ ஒரு பதப்படுத்தும் திரவத்தைச் செலுத்துவதற்காக ஏதோ ஒரு வேதசாஸ்திரப் பள்ளிக்குக் கொண்டு செல்லப்படவில்லை. இல்லை, ஐயா. அவன் வனாந்திரத்திற்குச் சென்றான், அங்கே அவனுக்கு முப்பது வயதாகும் வரை தேவனோடு வாழ்ந்தான். இயேசுவின் பிறப்பு உங்களுக்குத் தெரியும். நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது, ஆகையால் அதை மீண்டும் சொல்வதற்கு நான் நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். அது உங்களுக்குத் தெரியும். ஆனால் முப்பது வயதில், "இவன் எப்படிப் பட்ட பிரசங்கியாக இருக்க வேண்டும்?" இங்கே அவர் வனாந்திரத்திலிருந்து வெளியே வருகிறார், காலரைத் திருப்பிக்கொண்டோ, டக்ஸீடோ கோட் அணிந்துகொண்டோ, தினமும் மதிய உணவுக்கு வறுத்த கோழிக்கறியும் பிஸ்கட்டும் சாப்பிட்டுக்கொண்டோ அவர் வரவில்லை. இல்லை, ஐயா. அல்லேலூயா. அவர் ஒட்டகமயிரான உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டு இப்படி வனாந்திரத்திலிருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் மனந்திரும்புதலைப் பிரசங்கித்தார். 41 நான் அவரைப் பார்க்க முடிகிறது. ஏரோது வருகிறான், உங்களுக்குத் தெரியும், அவன் தன் சகோதரன் பிலிப்புவின் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். சில மூப்பர்கள் வெளியே வந்து, "இன்று, இப்போது, திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து பிரசங்கிக்க வேண்டாம். ஏரோது அங்கே உட்கார்ந்திருக்கிறான்," என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. முதிர்வயதான யோவான், பரிசுத்த ஆவியால் நிறைந்தவராய் (அவரைத் தடுத்து நிறுத்துவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?) அவனுக்கு நேராக நடந்து சென்று, அவன் முகத்திற்கு நேராக, "அவளை வைத்துக்கொள்ளுகிறது உனக்கு நியாயமல்ல," என்று சொன்னார். அது சரிதான். தேவனே, எங்களுக்குச் சில யோவான்களைத் தாரும். ஏன், நான் சொல்கிறேன், இன்று, பாப்டிஸ்ட் சபைக்கு, சமரசம் செய்து கொள்ளாமல், அளவிட முடியாத-கிறிஸ்துவின் அளவிட முடியாத ஐசுவரியத்தைப் பிரசங்கிக்கிற யோவான் ஸ்நானகனைப் போன்ற இன்னும் சில யோவான்கள் தேவைப்படுகிறார்கள். சகோதரனே, அவருக்கு எந்தக் கல்வியும் இருக்கவில்லை, அவர் ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் சென்றதாகத் தெரியவில்லை. அவருக்கு எந்த விதமான பட்டமும் இருக்கவில்லை, இளங்கலை அல்லது இளங்கலை பட்டமோ, அல்லது நீங்கள் அதை எப்படிக் அழைக்க விரும்புகிறீர்களோ அதுவோ அவருக்கு இருக்கவில்லை. D.D., D.D., அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்புகிறீர்களோ அதுவோ இல்லை. D.D. என்பதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? செத்த நாய் (Dead dog). சரி. அவருக்கு அதுபோன்ற எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்கே வாழ்கிறார்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அவர்களுக்குச் சொன்னார். தேவனே, அதுபோன்ற இன்னும் சில பாப்டிஸ்டுகளை எங்களுக்குத் தாரும். அது முற்றிலும் சரி. அவர் நின்று, "அவளை வைத்துக் கொள்ளுகிறது உனக்கு நியாயமல்ல," என்று சொன்னார். உண்மைதான். 42 அந்த நாள், யாரோ ஒருவரோடு நான் ஒரு பெண்மணியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்; பியானோ வாசித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியைப் பற்றிய ஒரு கதையை நான் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள்... இப்போது, இது உங்களுடைய சொந்த விஷயம். அது உங்களைப் பொறுத்தது. புரிகிறதா? ஆனால் அந்தப் பெண்மணி, அதிகப்படியான ஒப்பனை செய்திருந்தாள், ஒரு கொட்டகைக்கு (barn) வர்ணம் பூசும் அளவுக்கு அந்தப் பெண் தன் முகத்தில் வர்ணம் பூசியிருந்தாள். அங்கே அவர் சொன்னார், இந்த மனிதன் சொன்னான், "சகோதரன் பிரன்ஹாம், இது என் மனைவி." "இவள் ஒரு பரிசுத்தவான்" என்று சொன்னான். நான் சொன்னேன், "சகோதரனே, உமது மனதை புண்படுத்த நான் விரும்பவில்லை; அவள் ஒரு பேயை (haint) போல இருக்கிறாள். அவள் எனக்கு ஒரு பரிசுத்தவானைப் போலத் தெரியவில்லை." அதுதான்... பேய் (haint) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெற்கே, அது "ஒரு ஆவி (spook)." சரி. நான் உங்களுக்குச் சொல்கிறேன். கவனியுங்கள். வேதாகமத்தில் ஒரு ஆணைச் சந்திப்பதற்காக தன் முகத்தில் சாயம் பூசிக்கொண்ட ஒரே பெண் யேசபேல் மட்டும்தான், தேவன் அவளை நாய்களுக்கு இரையாக்கினார். எனவே, மிகவும் நல்லவர்கள் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுகிற இவர்களில் யாரையாவது நீங்கள் பார்த்தால். நீங்கள், "நாய்க்கறி அம்மையாரே (Miss Dog Meat), எப்படி இருக்கிறீர்கள்," என்று சொல்லலாம். தேவன் அவளை அப்படித்தான் அழைக்கிறார், அவருக்காக, அது நாய்க்கறி. புரிகிறதா? சரி. 43 இன்று நமக்கு என்ன தேவை என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், கவசங்களை (gloves) கழற்றிவிட்டு பிரசங்க மேடையில் நின்று, இயேசு கிறிஸ்துவின் முழு சுவிசேஷத்தையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடும் விளக்கத்தோடும் உரிமை பாராட்டுகிற பிரசங்கிமார்கள்தான் நமக்குத் தேவை. மக்களைக் கொண்டுவாருங்கள்... நீங்கள் அவர்களை இந்த வழியில் கொஞ்சம் அசைக்க வேண்டும், இந்த வழியில் கொஞ்சம் சமரசம் செய்ய வேண்டும். அதைத்தான் லுத்தரன்கள் சரியாகச் செய்தார்கள். அதைத்தான் மெத்தடிஸ்டுகள் செய்தார்கள், அதைத்தான் பாப்டிஸ்டுகள் செய்தார்கள். இப்போது பெந்தேகோஸ்தே சபையாரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பாடா! இதற்குப் பிறகு நீங்கள் என்னை விரும்பப் போவதில்லை. ஆனால் நான்... நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இதுதான் முக்கியமானது, இப்போது நான் தேவனுக்கு முன்பாகப் பொறுப்பாளியாக இருக்கிறேன். அது சரிதான். நான்... அது தேவனுடைய பரிசுத்தமான உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அந்த இருதயத்தைச் செம்மைப்படுத்துவதுதான். 44 இப்போது, நாம் அனைவரும் இங்கே இந்த மத்திய கிழக்கு-மத்திய கிழக்கு மாநிலங்களில் வாழ்கிறோம். இங்கே வெளியே நமக்கு ஒரு ஓக் மரம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், குளிர்காலம் முழுவதும், பழைய ஓக் மரம் தனது இலைகளை அப்படியே வைத்திருக்கிறது. ஆண்டின் வசந்த காலத்தில், மரத்தில் பழைய இலை இருக்கிறது. நீங்கள் சென்று அவற்றைப் பறிக்க வேண்டியதில்லை. புதிய ஜீவன் மேலே வரட்டும், பழைய இலை கீழே விழுந்துவிடும். ஒரு மனிதன் உண்மையாகவே மறுபடியும் பிறக்கும்போது, மற்றும் ஒரு... அவனுடைய இருதயம், ஆணோ அல்லது பெண்ணோ, பழைய ஜீவியம் விலகிவிடுகிறது; புதிய ஜீவியம் உள்ளே வந்து அதன் இடத்தை எடுத்துக்கொள்கிறது. அவர்களை தேவனோடு செம்மையாக இருக்க விடுங்கள், பிறகு நீங்கள் கவனிக்கலாம். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். என் நண்பரே, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நான் இங்கேயே வாய் மூடிக்கொள்வது நல்லது. அது சரிதான். என் வாழ்க்கை வரலாற்றில், நான் வெளியே செல்ல வேண்டியிருந்த முதல் சிறு அனுபவம் எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு ஒரு சிறிய பழைய தோழி இருந்தாள், நான் நினைத்தேன்... உங்களின் முதல் காதலி உங்களுக்கு எப்படி என்று தெரியும். ஓ, அவளுக்குப் புறாவைப் போன்ற கண்களும், அன்னப்பறவையைப் போன்ற கழுத்தும், முத்து போன்ற பற்களும் இருந்தன. நான் பார்த்ததிலேயே அவள்தான் மிகவும் அழகானவள் என்று நினைத்தேன். நாங்கள் வெளியே சென்றோம், நாங்கள்... என் நண்பன் ஒருவனும் நானும்; நாங்கள் கொஞ்சம் கோக் (Cokes) மற்றும் சில சாண்ட்விச்களை வாங்கினோம். என் சிறிய தோழிக்கு சில சாண்ட்விச்களை கொடுக்க நான் வெளியே வந்தேன். அவள் சாண்ட்விச்சை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், நாங்கள் கோக் குடித்தோம். நான் பாட்டில்களை உள்ளே கொண்டு போய் வைக்கப் போனேன். நான் திரும்பி வெளியே வந்தபோது... அது பெண்கள் தங்களின் நளினத்தை இழக்கத் தொடங்கிய காலக்கட்டம், உங்களுக்குத் தெரியும். அதனால், இங்கே அவள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்தேன். சிகரெட் பிடிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எனக்கு எப்போதும் ஒரு அபிப்ராயம் இருந்தது, இன்றும் அது எனக்கு இருக்கிறது. அவள் செய்ததிலேயே இதுதான் மிகவும் கீழ்த்தரமான காரியம். உங்கள் முகம் சிவந்துபோக விடாதீர்கள். புரிகிறதா? நீங்கள் குற்றவாளியாக இருந்தாலும், எழுந்து வெளியே நடந்து செல்லாதீர்கள். சரி. ஆனால் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். தேவன் நினைத்தால்... இன்று மதியம் இந்த மேடையில் தேவனுடைய தூதன் எனக்கு சாட்சி பகரும் விதமாக அவர் அதைக் குறித்து நினைத்தால், நீங்கள் அவருக்கு முன்பாக வரும்போது, அங்கே உள்ள வாசல்களுக்குள் நுழைவது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். முதலாவது: விட்டுவிடுங்கள்! நிறுத்துங்கள்! இந்த எண்ணங்களை ஒதுக்கி வையுங்கள். நியாயத்தீர்ப்பின் நேரம் வந்துவிட்டது. கன்னி மரியாள் அங்கே மேல் அறைக்குள் சென்று, அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் வரை காத்திருந்து, ஒரு குடிகாரப் பெண்ணைப் போலத் தள்ளாடிக் கொண்டு வெளியே வர வேண்டியிருந்தது என்றால், அதைவிட மலிவான எந்த வழியிலும் நீங்கள் ஒருபோதும் பரலோகத்திற்குச் செல்ல முடியாது. அது சரிதான். பெண்களே, ஆண்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். தேவனை இங்கே உள்ளே கொண்டு வாருங்கள், மீதமுள்ளவற்றை அவர் பார்த்துக்கொள்வார். இப்போது, பிறகு சுற்றிலும் பாருங்கள். "நல்லது, எனக்கு அது கிடைத்துவிட்டது" என்று நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. அது அப்படி இல்லை என்பதை கனிகள் காட்டுகின்றன. ஆனால் அது... நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். அப்படியே முன்னேறிச் செல்லுங்கள்; நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சரி. 45 இப்போது, பாருங்கள். யோவான் அங்கே வெளியே வந்து பிரசங்கிக்க ஆரம்பித்தபோது நான் அவரைப் பார்த்தேன், ஆஹா, அவனால் எந்த அளவுக்குக் கடுமையாகப் பிரசங்கிக்க முடியுமோ அந்த அளவுக்கு மனந்திரும்புதலுடன் பிரசங்கித்தார். மரத்தின் வேரிலே கோடாரி வைக்கப் பட்டிருக்கிறது, நல்ல கனிகொடாத மர மெல்லாம் வெட்டுண்டு கடலிலே போடப்படும். பின்பு கவனியுங்கள், அல்லது, அக்கினியிலே போடப்படும். பின்பு இயேசு அங்கே வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, உடனே தண்ணீரிலிருந்து கரையேறினார், தேவனுடைய சத்தம் பேசி, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்," என்று சொன்னது. பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு அவர் வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார். ஒவ்வொரு ஆணும் பெண்ணும், நீங்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றவுடனேயே, எல்லா பக்கங்களிலிருந்தும் பிசாசு உடனே உள்ளே நுழைகிறான். அவன் அப்படிச் செய்யவில்லை என்றால், நீங்கள் திரும்பிச் செல்வது நல்லது. 46 பின்பு ஒவ்வொரு முறையும் நீங்கள் சுகமாக்கப்படும்போது, இதோ மீண்டும் அறிகுறிகள் உங்களைச் சுற்றிலும் நகர்ந்து வருகின்றன. அது அப்படி வரவில்லை என்றால், கவனமாக இருங்கள். புரிகிறதா? தேவன் செய்ததைக் கண்டறிய சாத்தான் எப்போதும் அங்கேயே இருக்கிறான். பின்பு அவருடைய ஊழியம் பெரியதானது, அவர் புறப்பட்டுச் சென்றார். வெளியே அந்த... பிறகு நாம் நமது வேதப்பகுதிக்கு வருகிறோம். இப்போது விரைவாக. பின்பு நாம் பார்க்கிறோம், லாசரு... அவர் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றார். இயேசு வீட்டை விட்டுச் சென்றவுடனேயே, வியாதி உள்ளே நுழைந்தது, துக்கம் உள்ளே நுழைந்தது. கிறிஸ்தவர்களே, கவனியுங்கள், இயேசு உங்கள் வீட்டை விட்டுச் செல்லும்போது, அதன்பின்னர் வியாதியும் தொல்லையும் நேராக உள்ளே வரும். அவர் உங்கள் வீட்டை விட்டுச் செல்லும்போது, தொல்லைக்குத் தயாராகுங்கள், ஏனென்றால் அது அந்த நேரத்திலேயே வழியில் வந்து கொண்டிருக்கிறது. அவரை உங்கள் வீட்டுக்குள் வரவேறுங்கள். அவர் காணப்படாத விருந்தினராக இருக்கட்டும். மேசையருகே உட்காருங்கள், அதற்காக அவருக்கு நன்றி சொல்லாமல் ஒருபோதும் சாப்பிட வேண்டாம். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் அநேகர், ஒருபோதும் நன்றி செலுத்துவதில்லை என்பதை நான் பார்க்கிறேன், ஒரு ஆப்பிள் மரத்தின் அடியில் இருக்கும் ஒரு பன்றியைப் போல அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு பன்றி ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்திருக்கலாம், ஆப்பிள்கள் நாள் முழுவதும் அதன் தலையில் அடிக்கலாம், அது இனி உறும முடியாத அளவுக்குச் சாப்பிடும்; ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்று பார்க்க அது ஒருபோதும் அண்ணாந்து பார்க்காது. அது சரிதான். அதுதான் முற்றிலும் உண்மை. மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், "நன்றியறியா தவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காத வர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமை யுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைகிறவர் களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ள வர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்: இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு." ஆவியானவர் தீமோத்தேயுவில் அப்படித்தான் சொன்னார். அது சரியா? 47 அவர்கள் இன்றும் அதில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பெந்தேகோஸ்தே சபையாரும் அதற்குள்ளாகவே சென்று கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தவான்களாகிய நீங்களும் தலைகுப்புற அதற்குள்ளாகவே செல்கிறீர்கள். அது உண்மைதான். ஓ, என் தேவனே. இது எவ்வளவு ஒரு பரிதாபகரமான காட்சி. சகோதரனே, இன்று நமக்குத் தேவையானது ஒரு எழுப்புதல், ஒரு கிளர்ச்சி, ஒரு உடைக்கப்படுதல், ஒரு நொறுக்கப்படுதல், மீண்டும் குயவனின் வீட்டிற்குக் கீழே செல்வதுதான். கவனியுங்கள். இப்போது இயேசு வீட்டை விட்டு வெளியே செல்வதை நான் பார்க்கிறேன். லாசரு வியாதிப்பட்டான். இப்போது, இது சரித்திரம்; அவனுடைய நுரையீரலில் இரத்தப்போக்கு (hemorrhages) இருந்தது என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரியாது. அது வேதாகமம் அல்ல; அது ஒரு சரித்திராசிரியரின் எழுத்து மட்டுமே. அவனுக்கு இரத்தப்போக்கு இருந்தது என்று. இயேசு வீட்டை விட்டு வெளியே சென்றபோது, மார்த்தாளும் மரியாளும், மற்றும் அவர்கள் அனைவரும், ஜெப ஆலயத்தை விட்டு வெளி யேறி, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். லாசருக்காக வந்து ஜெபிக்க அவர்கள் இயேசுவுக்குச் செய்தி அனுப்பினார்கள். அவர் அதைச் செய்தார் என்று நினைக்கிறீர்களா? அவர் அப்படியே விலகி நடந்து சென்றுவிட்டார். 48 இப்போது, அது நீங்களாக இருந்திருந்தால், ஹா, நீங்கள் உங்கள் போதகரை அழைத்திருந்து அவர் வராமல் இருந்திருந்தால், நீங்கள் சொல்லியிருப்பீர்கள், "ஏன், அந்த வயதான மாயக்காரன். நான் இனி ஒருபோதும் பிலதெல்பியா சபைக்குத் திரும்பிச் செல்ல மாட்டேன். நான் இனி ஒருபோதும் திரும்பிப் போக மாட்டேன். அவர் வரவில்லை." ஆனால் மரியாளும், மார்த்தாளும் அப்படி நினைத்திருந்தால், அது எப்படிப்பட்ட ஒரு நாளாக இருந்திருக்கும். இப்போது, அவர் இதைச் சொல்லும்படி என்னைக் கேட்கவில்லை, நான் சும்மாதான் அதைச் சொன்னேன். அது எந்த ஒரு சபைக்கும் பொருந்தும். தேவனுடைய மனுஷனாகிய உங்கள் போதகர் மீது நீங்கள் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். அவர் அப்படி இல்லை என்றால்-அவர் அப்படி இல்லை என்றால், அவரை வெளியேற்றுங்கள், தகுதியான ஒருவரை அங்கே கொண்டு வாருங்கள். அது சரிதான். சபையை நிறுத்திவிடாதீர்கள். அது சரிதான், தொடருங்கள். அவர் தேவனுடைய மனுஷனாக இல்லை என்றால், அவர் வாழ வேண்டியபடி வாழாமல், செய்ய வேண்டியதைச் செய்யாமல், செயல்பட வேண்டியபடி செயல்படாமல், பிரசங்கிக்க வேண்டியதைப் பிரசங்கிக்காமல் இருந்தால், அவரை வெளியேற்றுங்கள்; அதைச் செய்யும் வேறொருவரை அங்கே வையுங்கள். 49 இப்போது, இப்போது, பின்பு உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பின் வீடு, தேவனுடைய வீடு, தேவன் இறங்கி வந்து தனது நியாயத்தீர்ப்பை வழங்கும் இடம். உங்கள் போதகர் ஒரு நீதிமானாக இருக்க வேண்டும். சபையார் நூறு சதவீதம் அவரோடு இருக்க வேண்டும். நீங்கள் நூறு சதவீதம் ஒன்றாக இருக்க வேண்டும். அங்கே, நீங்கள் அப்படி இல்லை என்றால், சாத்தான் உள்ளே நுழைய ஒரு வழியைப் பெற்றுக்கொள்கிறான். உங்களுக்கு எங்கேயோ ஒரு ஓட்டை (loophole) இருக்கிறது, எனவே எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ளுங்கள். பின்பு அவர்கள்-அவர்கள் மீண்டும் இயேசுவுக்கு ஆள் அனுப்பினார்கள். அதைச் செய்வதற்குப் பதிலாக, அவர் அப்படியே சென்றுவிட்டார்; ஒருபோதும் வரவில்லை, அல்லது அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. பிதாவிடமிருந்து அவர் ஒரு தரிசனத்தைப் பெற்றிருந்தார். என்னால் முடிந்தால், இன்றிரவு நான் அதை அங்கிருந்து தொடர்வேன். லாசரு மரிக்கப் போகிறான் என்று பிதாவிடமிருந்து அவர் ஒரு தரிசனத்தைப் பெற்றிருந்தார், அவர் தனது தரிசனத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தது. நிச்சயமாக, அவர் அதைச் செய்தார். அவர் சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் சொன்னார்கள்... அவர், "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்," என்று சொன்னார். ஆக, சீஷர்கள், அவர்கள் சொன்னார்கள், "நல்லது, அவன் நித்திரையடைந்திருந்தால், அவன் மிகவும் நலமாக இருக்கிறான் என்று அர்த்தம்; அவன் குணமடைந்து வருகிறான். அவன் தேறிவருகிறான்." பின்பு அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அவர் அவர்களுக்குத் தெரியப் படுத்தினார். அவர் சொன்னார், "அவன் மரித்துப்போனான். நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசிப்பதற்கு ஏதுவாகிறது என்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன். ஆனால் அவனை எழுப்பப் போகிறேன்." தான் எங்கே போகப் போகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார்... தேவன் ஏற்கனவே அவருக்குச் சொல்லியிருந்தார். பிதா என்ன செய்யச் சொன்னாரோ அதை அவர் பின்பற்றினார், மனுஷன் அவருக்குச் சொன்னதை அல்ல; தேவன் சொன்னதை. என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குச் சரியாகத் தெரிந்திருந்தது. 50 அவர்களில் சிலர் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, "ஏய். அந்த ஹோலி-ரோலர் (holy-roller) இங்கேதான் சுற்றிக்கொண்டிருந்தார், தெய்வீக சுகமளித்தலைப் பற்றி பிரசங்கிக்கிறார். மேலும், ஓ, அந்த இரத்தப்போக்கினால் அவன் வியாதிப்பட்டான் என்று அவர் சொன்னார், அது அவருக்கு மிகப் பெரிய ஒரு வேலையாக இருந்தது. அவர் நழுவிச் செல்வதைப் பார்த்தீர்களா? இப்போது, அதைப் பற்றி நாம் பார்ப்போம்." சரி. பின்பு அவர், "அவனை எழுப்பப் போகிறேன்," என்று சொன்னார். இப்போது, முதல் நாள் கடந்துபோனது... வேதனையான காரியங்கள் உள்ளே வந்தன, லாசருவைப் பிடித்தன, எடுத்தன, அவன் உடலைப் பதப்படுத்தின, அவனை வெளியே எடுத்துச் சென்று, கல்லறையில் அடக்கம் செய்தன. எல்லா நம்பிக்கைகளும் போய்விட்டன. இரண்டாவது நாள் கடந்துபோனது, இன்னும் இருளாகத்தான் இருந்தது. மூன்றாவது நாள் கடந்துபோனது, அவனது உடலில் அழுகுதல் தொடங்கியது. நான்காவது நாள் அவன் முற்றிலுமாகப் போய்விட்டான். 51 பின்பு உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், யாரோ வருகிறார்கள், அங்கே சிறிய மார்த்தாளும் மரியாளும் வீட்டில் உட்கார்ந்து, அழுதுகொண்டிருக்கிறார்கள். குடும்பத்தைக் காப்பவன் போய்விட்டான், எல்லாரும் விட்டுச் சென்றுவிட்டார்கள். என்ன போய்விட்டது என்று பாருங்கள். அவர்கள் தங்கள் சபையை விட்டுவிட்டார்கள். இப்போது, எந்த மனுஷன் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்களோ, அவர் அவர்களைக் காட்டிக்கொடுத்தது போல் தோன்றியது. எல்லா நம்பிக்கைகளும் போய் விட்டன. அவர்களின் சகோதரன் மரித்துப் போனான். அவர்கள் தங்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த மனுஷன் தெய்வீக சுகமளித்தலைப் போதித்துக் கொண்டிருந்தார், மற்றும் அவர்களின்-அவர்களின் போதகரைப் போல, அவர் போய்விட்டார். எல்லா நம்பிக்கைகளும், எல்லாம் போய்விட்டன. அந்த சமயத்தில்தான், இயேசு அங்கே வந்தார். வழக்கமாக அவர் அப்படித்தான் வருவார்: இருள் சூழ்ந்த நேரத்தில். இயேசு வந்தபோது, அது மிகவும் இருள் சூழ்ந்த நேரமாக இருந்தது. நான் அங்கே மருத்துவமனையில் படுத்திருந்தேன். மருத்துவர் உள்ளே நடந்து வந்து, என்னைப் பார்த்தார். அவர் சொன்னார், "என் மகனே, நீ உயிர்வாழ இன்னும் மூன்று நிமிடங்களே உள்ளன. உன் இதயம் ஒரு நிமிடத்திற்கு பதினேழு முறை துடிக்கிறது." மிகவும் இருள் சூழ்ந்த நேரம், பின்பு இயேசு அங்கே வந்தார். ஆம். இங்கே இண்டியானாபோலிஸில் E. ஹோவர்ட் கேடல் (E. Howard Cadle) என்பவர், அங்கே தெருவில் குடிபோதையில் படுத்திருந்தார், அவர் வாயில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவர் பின்வாங்கிப் போயிருந்த சபைக்குள் தள்ளாடிக்கொண்டே சென்றார். ஜனநாயகக் கட்சியினர் (Democrats) அதை ஒரு பெரிய பேரணி மன்றமாக மாற்றியிருந்தார்கள், அவர் அடித்தளத்திற்குச் சென்று, குடிபோதையில், நிலக்கரி குவியலின் மீது தள்ளாடி விழுந்தார், அங்கே அவர் தாயின் புகைப்படம் கிடந்தது. அங்கே அவர் ஜெபித்தார். அவர் கண்டதிலேயே மிகவும் இருள் சூழ்ந்த நேரம்; குளிர், குடிபோதை, சுயநினைவை இழந்த நிலை. பின்பு இயேசு அங்கே வந்தார். ஆம். 52 அங்கே, மேயோ சகோதரர்கள் (Mayo Brothers) நான் உயிர்வாழ கொஞ்ச காலமே இருக்கிறது என்று என்னிடம் சொன்னபோது, இயேசு அங்கே வந்தார். அது எப்போதும் மிகவும் இருள் சூழ்ந்த நேரமாகவே இருக்கிறது, பின்பு அவர் வருகிறார். அவர் எப்போதும் அப்படித்தான் செய்கிறார், சரியான நேரத்தில், இயேசு அங்கே வந்தார். இப்போது, அந்த பழைய சிறிய மார்த்தாள், காரியங்களில் மிகவும் தாமதம் செய்பவளாக இருந்தாள், ஆனால் நான்-தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி, மற்றும் பலவற்றைப் பற்றி. ஆனால் நான் அவளுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன். இயேசு வந்ததைக் கேள்விப்பட்ட உடனேயே, அவளால் எந்த அளவுக்கு வேகமாகப் போக முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக அவள் இங்கே சென்றாள். அவர்கள் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, "இப்போது அவள் போவதைப் பாருங்கள். இப்போது, அவர் அங்கே வெளியே செல்கிறார்; அந்த ஹோலி-ரோலர் (holy-roller) திரும்பி வருகிறார் என்று அவர்கள் சொல்கிறார்கள்." அவள் அதை அப்படியே தள்ளிவிட்டுச் சென்றாள். அவள் இயேசுவிடம் செல்ல விரும்பினாள். மார்த்தாள் அங்கே வேதாகமத்தில் எங்கேயோ வாசித்திருந்தாள், ஒருமுறை ஒரு தீர்க்கதரிசிக்கு ஒரு பெரிய உதவியைச் செய்த ஒரு சூனேமியாள் இருந்தாள். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அவர் பெயர் எலியா. எலியா அவளை ஆசீர்வதித்து, ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று சொன்னார். அவள் பிள்ளைபெறும் வயதைக் கடந்திருந்தபோது அந்தக் குழந்தை பிறந்தது. அவள் அந்தக் குழந்தையை வளர்த்தாள். அந்தச் சிறு குழந்தைக்கு வெயில் தாக்கியிருக்க வேண்டும், அல்லது வேறு ஏதாவது ஆகியிருக்க வேண்டும். அவன், "என் தலை. என் தலை" என்றான். அவன் பகல் பதினொரு மணி அளவில், தன் தகப்பனுடன் வயலில் இருந்தான். அவன் ஒரு வேலைக்காரனை அனுப்பி, குழந்தையைத் தாயின் மடியில் வைக்கச் சொன்னான். குழந்தை நண்பகல் வரை அங்கேயே கிடந்து, மரித்துப்போனான். அந்தச் சூனேமியாளைப் பாருங்கள், எவ்வளவு விசுவாசமாக இருந்தாள். 53 அவள் குழந்தையை எடுத்துக்கொண்டு, எலியா தூங்கும் அந்தச் சிறிய அறைக்கு நேராகச் சென்றாள். அவர் வரும்போது தூங்குவதற்காக அவள் அங்கே அவருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தியிருந்தாள். அவனைக் கொண்டுசெல்வதற்கு அது எவ்வளவு ஒரு நல்ல இடம், தீர்க்கதரிசி தூங்கிய அந்தத் தீர்க்கதரிசியின் படுக்கையின் மீது. அவள் அவனை அந்த-அந்தப் படுக்கையின் மீது கிடத்தினாள். அவள் வேலைக்காரனிடம் கீழே சென்று, "இப்போது ஒரு கழுதையின்மேல் சேணம் வை, நான் சொல்லாவிட்டால்," ஓ, என் தேவனே, "எனக்காக ஓட்டத்தை நிறுத்தாதே" என்றாள். "அந்தத் தீர்க்கதரிசி இருக்கிற கர்மேல் பர்வதத்திற்கு நாம் போவோம்" என்று சொன்னாள். அதற்கு அவள் கணவன், "இன்று அமாவாசையுமல்ல, ஓய்வுநாளுமல்ல. அவர் அங்கே இருக்க மாட்டார்," என்றான். அவள், "எல்லாம் சரிதான். என்னைப் போக விடு," என்றாள். அந்தத் தீர்மானம் எனக்குப் பிடித்திருக்கிறது. அது எனக்குப் பிடித்தி ருக்கிறது. அல்லேலூயா. எபிரேய மொழியில் "அல்லேலூயா" என்றால், "நமது தேவனைத் துதியுங்கள்" என்று அர்த்தம், எனவே அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்-கவலைப்பட வேண்டாம். சரி. 54 அவள் புறப்பட்டாள். அவள், "நீ தாமதம் செய்யாதே. இப்போது நீ ஓட்டு. இந்தக் கோவேறு கழுதையை எந்த அளவுக்கு வேகமாக ஓட்ட முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக ஓட்டு," என்றாள். அவள் கர்மேல் பர்வதத்திற்கு அருகில் வந்தபோது, அவளுக்கு ஒரு காரியம் தெரிந்திருந்தது, தேவன்தான் தனக்கு அந்தக் குழந்தையைக் கொடுத்தார் என்பது. பூமியில் அவளுக்குத் தெரிந்த மிக நெருக்கமான பிரதிநிதி, அவருடைய தீர்க்கதரிசியான எலியாதான். தேவன் ஏன் குழந்தையை எடுத்துக் கொண்டார் என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அந்தத் தீர்க்கதரிசியை அவளால் தொடர்புகொள்ள முடிந்தால், தேவன் அந்தத் தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. "என்னால் அந்தத் தீர்க்கதரிசியிடம் செல்ல முடிந்தால், என் குழந்தை ஏன் மரித்தான் என்பதை நான் கண்டுபிடிப்பேன். அவன் வருவான் என்று என்னிடம் சொன்னவர் அவர்தான். அது தேவனுடைய தீர்க்கதரிசி என்று எனக்குத் தெரியும். என்னால் அவரிடம் செல்ல முடிந்தால் மட்டும் போதும், நான் கடினமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம், நான் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் என்னால் அந்தத் தீர்க்கதரிசியிடம் செல்ல முடிந்தால், இந்தக் குழந்தை ஏன் போய்விட்டான் என்பதை அவரால் என்னிடம் சொல்ல முடியும்." எனவே இங்கே தீர்க்கதரிசி நின்றார். நடக்கும் எல்லாவற்றையும் தேவன் எப்போதும் தமது தீர்க்கதரிசிகளுக்குச் சொல்வதில்லை. எனவே எலியா வாசலுக்கு வெளியே நடந்து வந்தார், கேயாசி அவருடன் இருந்தான், அவர் சொன்னார், "இதோ அந்தச் சூனேமியாள் வருகிறாள்." அவர் சொன்னார், "அவள் கவலையாக இருக்கிறாள். ஏதோ தவறு நடந்திருக்கிறது." அவர் சொன்னார், "தேவன் அதை எனக்கு மறைத்துவிட்டார். என்ன விஷயம் என்று எனக்குத் தெரியவில்லை." எனவே அவர் சொன்னார், அவள் வருவதை அவர் பார்த்தபோது, அவள் அருகில் வந்தாள். அவர் கேட்டார், "உனக்குச் சுகமா? உன் புருஷனுக்குச் சுகமா? பிள்ளைக்குச் சுகமா?" இதைக் கேளுங்கள். "சுகமே." மகிமை. இப்போதே இங்கே பிரசங்கிப்பதற்குப் போதிய இடமில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். "சுகமே." ஏன்? குழந்தை, ஒரு சடலம், அவள் கணவன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு, தரையில் நடந்து கொண்டிருக்கிறான், அவள் இதயம் உடைந்துபோயிருந்தது. "சுகமே." ஹும். 55 அவளுடைய விசுவாசம் என்ன வென்றால், அவளால் தீர்க்கதரிசியிடம் செல்ல முடிந்தால் என்பதுதான். அவள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். "நான் உம்மைக் கண்டுபிடித்துவிட்டேன், எலியா. நீர் தேவனுடைய பிரதிநிதி. தேவன் தமது தீர்க்கதரிசிக்குள் இருக்கிறார். நான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். தேவன் அதை வெளிப்படுத்துவார் என்று நான் திருப்தி யடைகிறேன். எல்லாம் நலமே." அவள் ஓடிச் சென்று அவருடைய பாதங்களில் விழுந்தாள். கேயாசி நினைத்தான், "இங்கே." அவன் மக்களை தன் எஜமானனிடமிருந்து விலக்கி வைக்க வேண்டியவன். அவன் அவளைப் பிடித்து இழுத்தான். அவர் சொன்னார், "அவளை விட்டுவிடு." அவர் சொன்னார், "அவள் ஆத்துமா வியாகுலமாயிருக்கிறது. அது எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியவில்லை." பின்பு நடந்ததை அவள் அவருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தாள். இப்போது கவனியுங்கள். அவர் சொன்னார், "கேயாசி, என் தடியை எடுத்துக்கொண்டு, நீ முன்சென்று, குழந்தையிடம் போ. வழியிலே ஒருவன் உனக்கு எதிர்ப்பட்டால், அவனுக்கு நீ வந்தனம் செய்யாதே; ஒருவன் உனக்கு வந்தனம் செய்தால், நீ அவனுக்கு மறுமொழி சொல்லாதே. யாராவது 'ஹலோ' என்று சொன்னால்; அவர்களிடம் எதுவும் சொல்லாதே. நேராகப் போ." 56 இன்று அதுதான் பிரச்சினையாக இருக்கிறது. நமக்கு ஒரு செய்தி கிடைக்கும் போது, நாம் சமூக விவகாரங்களுக்காக, விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்களுக்காக, அதுபோன்ற எல்லாவற்றிற்காகவும், சிறிய தையல் மற்றும் தைப்பதற்காகவும், இன்னாரைப் பற்றிப் பேசுவதற்காகவும் நின்றுவிடுகிறோம். நாம் எங்கும் செல்ல முடியாததில் ஆச்சரியமில்லை. தேவனுடைய செய்தியைப் பெற்ற ஒரு மனிதன், "முன்னேறிச் செல்வோம்" என்பான். சரி. "ஆனால் என் தடியை எடுத்துக்கொள்." எலியா அந்தத் தடியைத் தொட்டிருந்தார். தான் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவை என்று எலியாவுக்குத் தெரிந்திருந்தது. நாம் ஏன் வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைக்கிறோம்? நாம் ஏன் மூப்பர்கள் மீது கைகளை வைத்து அவர்களை அபிஷேகம் செய்கிறோம்? தான் தொட்டது ஆசீர்வதிக்கப்பட்டது என்பது எலியாவுக்குத் தெரிந்திருந்தது. அங்கிருந்துதான் பவுல் தன் சரீரத்திலிருந்து கைக்குட்டைகளை எடுப்பதைப் பெற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? தான் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டது என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. மக்கள் அதை விசுவாசிக்க விரும்பினால், அவர் அவர்களுக்காக ஜெபித்து அவர்கள் மீது கைகளை வைத்ததுபோலவே, அது எதுவாக இருந்தாலும், நீங்களும் அதே ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். 57 அந்தத் தடி ஆசீர்வதிக்கப்படும் என்பது எலியாவுக்குத் தெரிந்திருந்தது. அவர் சொன்னார், "கேயாசி, என் தடியை உன் கையில் எடுத்துக்கொள், அதை உனக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு, இப்போது முன்னேறிச் செல். எதற்காகவும் நிற்காதே. யாராவது உன்னிடம் பேசினால்; பேசாதே. உனக்கு இப்போது ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. போ, இந்தத் தடியை எடுத்துக்கொள்." அது சரிதான். கைக்குட்டை சரிதான். ஆனால் அந்தச் சூனேமியாள், தடிக்குள் தேவன் இருந்தாரா இல்லையா என்று அவளுக்குத் தெரியாது, ஆனால் தேவன் தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவள், "கர்த்தரின் ஜீவனைக்கொண்டும்..." என்றாள். அவர், "இப்போது அவளுடன் போ," என்று சொன்னார். 58 அவள், "கர்த்தரின் ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்கிறேன், நான் உம்மை விடமாட்டேன்" என்றாள். ஓ, இதோ பாருங்கள். "இதைப் பற்றி நமக்குத் தெரியும் வரை, நான் இங்கேயே, உமது அருகிலேயே தங்கியிருக்கப் போகிறேன், இப்போது நீர் என்னைப் பொறுப் பேற்றுக்கொள்ள வேண்டும்." அவர், "...அவளுடன் போ," என்று சொன்னார். "இல்லை." கேயாசி முன்னே சென்றான், எனவே அவர் தன் அறையைக் கட்டிக்கொண்டு அவளுடன் புறப்பட்டார். இதோ அவர்கள் போகிறார்கள். தீர்க்கதரிசியுடன் அந்தப் பெண், அவள் இதயத்தின் விருப்பம், கீழே சென்று கொண்டிருக்கிறது. எலியா சொன்னார், "எனக்குத் தெரியாது. அவர் அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. என்னால் உனக்குச் சொல்ல முடியாது. அப்படியானால் நான் அங்கே கீழே வருகிறேன்." இதோ கேயாசி திரும்பி வருகிறான். அவர் கேட்டார், "நீ அவன்மீது தடியை வைத்தாயா?" "ஆம்." "ஏதாவது அறிகுறிகள் இருந்ததா?" 59 "ஜீவன் இல்லை. அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் இன்னும் மரித்துத்தான் கிடக்கிறான். அவன் போய் விட்டான்." புரிகிறதா? அந்தப் பெண்ணின் விசுவாசம் அதிலே இருக்கவில்லை. அது தீர்க்கதரிசியிடம் இருந்தது. அவளுக்குத் தெரிந்திருந்தது... நல்லது, தேவன் தடியுடன் இருந்தார் என்று அவள் விசுவாசித்திருந்தால், அது அதே காரியத்தைச் செய்திருக்கும். ஆனால் தேவன் தமது தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. எனவே அங்கே-இதோ எலியா சென்றார். அக்கம் பக்கத்தினர் அனைவரும் வாசலில் கூடிநின்றார்கள், அவர்கள் அழுதுகொண்டும், அலறிக் கொண்டும், புலம்பிக்கொண்டும், இப்படியாகச் செய்துகொண்டிருந்தார்கள். முதிர் வயதான எலியா அதுபோன்ற ஒரு கூட்டத்திற்குள் நடந்து சென்றார். உள்ளே நடந்து, கதவை ஒன்றாக இழுத்து, கதவை அடைத்தார். அங்கே அந்தச் சிறிய சடலம் கிடந்தது, பல, பல மணிநேரங்களாக மரித்துக்கிடந்தது, ஒருவேளை மாலையில் மிகவும் தாமதமாக இருக்கலாம். எலியா அறையில் முன்னும் பின்னுமாக நடந்தார். ஓ, என் தேவனே. அல்லேலூயா. அறையில் முன்னும் பின்னுமாக நடந்து, அங்கே நடந்து சென்றார்... தேவன் தமக்குள்ளே இருந்தார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தன் உடலை குழந்தையின் மீது கிடத்தினார், தன் உதடுகளை அவன் உதடுகள் மீதும், தன் மூக்கை அவன் மூக்கு மீதும், தன் நெற்றியை அவன் நெற்றியின் மீதும் வைத்தார். அவர் தன் உடலை அங்கே வைத்துப் பிடித்துக்கொண்டார், ஜெபம் அல்ல; தன் உடலை வைத்தார். அவர் அங்கே கிடந்தார். 60 சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் சரீரம் அனல் கொள்கிறதை உணர்ந்தார். எழுந்தார். மீண்டும் நடந்தார். ஓ, என் தேவனே. தரையில் முன்னும் பின்னுமாக, அங்குமிங்குமாக, வெளியே ஒரு கூச்சல், மற்றும் அலறுதலும் நடந்துகொண்டிருந்தன, எலியா நடந்து கொண்டிருந்தார்... மீண்டும் திரும்பி நடந்து, குழந்தையின் மீது தன் உடலைப் போட்டார், குழந்தை ஏழு முறை தும்மினான். அவனைத் தூக்கிக்கொண்டு, "இப்போது அந்தச் சூனேமியாளை அழை," என்று சொன்னார். இதோ பாருங்கள். சந்தேகமில்லாமல், மார்த்தாள் அதை வாசித்திருந்தாள். தேவன் தமது தீர்க்கதரிசிக்குள் இருந்தால், நிச்சயமாக அவர் தமது குமாரனுக்குள்ளும் இருப்பார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அல்லேலூயா. "என் சகோதரன் மரித்துப்போனான், ஆனால் நான் தேவகுமாரனிடம் செல்லுகிறேன். நான் அங்கே செல்லும்போது எனக்கு ஆறுதல் கிடைக்கும்." அவள் நேராக ஓடுகிறாள். இப்போது, பாருங்கள். அவள் அவரைக் கடிந்துகொண்டிருக்கலாம் என்பது போலத் தோன்றுகிறது. அவள் அவரை நிந்தித்தி ருக்கலாம் என்பது போலத் தோன்றுகிறது. அவள், "நீர் ஏன் என் சகோதரனிடம் வரவில்லை? நாங்கள் உம்மைக் கூப்பிட்டபோது நீர் ஏன் வரவில்லை? உம்மப் பின்பற்று வதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். நாங்கள் சபையை விட்டு வெளியேறினோம். நகரத்தில் எங்கள் கௌரவம் முழுவதையும் நாங்கள் இழந்துவிட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் செய்திருக்கிறோம். உமது சொந்த நெருங்கிய நண்பனுக்காக ஜெபிக்க வரும்படி நாங்கள் உமக்கு ஆள் அனுப்பியபோது, நீர் அதைச் செய்ய மறுத்துவிட்டீர்," என்று சொல்லியிருக்கலாம். அவளுக்கு அப்படிச் செய்ய உரிமை இருந்தது போலத் தோன்றியது. அவள் அப்படிச் செய்திருந்தால், இந்தக் கதை ஒருபோதும் எழுதப்பட்டிருக்காது. 61 இது அதைப் பற்றிய உங்கள் மனப்பான்மையைப் பொறுத்தது. தேவனுடைய தெய்வீக ஈவின் மீதான உங்கள் மனப்பான்மை, நீங்கள் கேட்பதை அப்படியே பெற்றுத்தரும். உங்களுக்குப் புரிகிறதா? ஓ, சகோதரர் போஸ், நான் இங்கேயே நிறுத்திவிட்டு, ஒரு அரை மணி நேரம் இதைப்பற்றி ஆழமாகப் பேச விரும்புகிறேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது. உங்கள் மனப்பான்மை: தேவன் ஒரு ஈவை அனுப்ப முடியும், மேலும் நீங்கள் என்னவாக இருந்தாலும்... அதைப் பற்றி நீங்கள் என்ன மனப்பான்மை கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அவருடைய முகத்தில் அடித்து, அவர் மேல் துப்பி, எல்லாவற்றையும் செய்தவர்களைப் பாருங்கள், அங்கு எந்த வல்லமையும் வெளிப்படவில்லை. ஆனால் அதை விசுவாசித்த ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், சுகமானாள். அது சரியா? சரி. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. தேவன் அதை அனுப்புகிறார். எந்தவொரு தெய்வீக ஈவின் மீதான உங்கள் மனப்பான்மையே, அதிலிருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. 62 எனவே அங்கே... அவளுக்குத் தெரிந்திருந்தது. அவள் நேராக அவரிடம் ஓடினாள். அவளைப் பாருங்கள். நான் இதை விரும்புகிறேன். அந்த இளமையான, அழகான யூதப் பெண் நேராக ஓடிவந்து, அவருடைய பாதங்களில் விழுந்து, "ஆண்டவரே" என்றாள். அதுதான் அவராக இருந்தார். அதோ உங்கள் தலைப்பு. நீர் ஆண்டவர் என்று நான் விசுவாசிக்கிறேன். "ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்." அதைப் பாருங்கள். எல்லா இருளும், எல்லா சந்தேகங்களும், எல்லா பயங்களும், எல்லாமே கடந்து போய்விட்டன; அவள் அப்போது இயேசுவுடன் இருந்தாள். தேவன் தமது தீர்க்கதரிசிக்குள் இருந்தால், தேவன் தமது குமாரனுக்குள்ளும் இருப்பார் என்று அவளுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவரே தேவனுடைய பிரதிநிதியாக இருந்தார். அது சரியா? ஒரு காலகட்டத்தில் பூமியில் தேவனுக்கு ஒரு பிரதான பிரதிநிதி இருப்பார். அவரிடம் ஒரு எலியா இருந்தார், எலியா எடுத்துக் கொள்ளப்பட்டவுடன், எலிசா வந்தார். பார்த்தீர்களா? ஒரே ஒரு பிரதான பிரதிநிதி மட்டுமே. இன்று அவருடைய பிரதான பிரதிநிதி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர்; அவரே அவருடைய பிரதிநிதி. இப்போது, இந்த மதிய வேளையில் நீங்கள் அவரிடம் வந்து, அவர் உங்களை ஆசீர்வதிப்பதை நீங்கள் உணர முடிந்தால், ஓ, ஓ, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. இதோ நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அவரை உணர்ந்த உடனே-அவர் உங்கள் சரீரத்தை ஒருமுறை தொடுவதை நீங்கள் உணர்ந்தால், அங்கே விசுவாசம் அதை உறுதிப்படுத்தினால், "ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன்." ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. 63 அவள் இயேசுவின் பாதங்களில் விழுந்தாள்; அவள் சொன்னாள், "ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்." இப்போது, சூனேமியாள் அந்தத் தீர்க்கதரிசியிடம் எப்படி இருந்தாளோ, அப்படியே மரியாளும் தேவனுடைய குமாரனிடம் இருந்தாள். அவள் அவரை தேவனுடைய குமாரன் என்று கண்டு கொண்டாள். அதுதான் அவராக இருந்தார். அவள் அவரை ஆண்டவர் என்று கண்டுகொண்டாள். அதுதான் அவராக இருந்தார். மற்ற காரியங்கள் எப்படி இருந்தாலும், அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். "நீர் இங்கேயிருந்தீரானால்..." என்று அவள் சொன்னாள். இப்போது அவரிடத்தில் அவளுக்குக் கிருபை கிடைத்தால், அவள் கேட்பதை அவள் பெற்றுக்கொள்வாள். அதுதான் சூனேமியாள் எலியாவிடம் கிருபை பெறுவதற்கான காரணமாகும். பார்த்தீர்களா? அங்கே அவர்தான் தேவனுடைய பிரதிநிதி என்பது அவளுக்குத் தெரியும், அவரிடத்தில் மட்டும் கிருபை கிடைத்துவிட்டால், அதனால்தான்-அப்போது நிலைமை அதுதான், அது தீர்க்கப்பட வேண்டியதாய் இருந்தது. "இப்போது, இயேசுவிடத்தில் எனக்குக் கிருபை கிடைத்துவிட்டால், அது இந்தக் காரியத்தைத் தீர்த்துவிடும்." 64 இப்போது, இந்த மதிய வேளையில் பரிசுத்த ஆவியானவரிடத்தில் நமக்குக் கிருபை கிடைத்துவிட்டால், அது இந்தக் காரியத்தைத் தீர்த்துவிடும். அது அங்கேயே அதைச் செய்துவிடும்: அவரே தேவனுடைய பிரதிநிதி. "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களுடனே இருப்பேன், உங்களுக்குள்ளும் இருப்பேன்." அவரிடத்தில் கிருபையைக் கண்டடையுங்கள், இன்றிரவு உங்கள் வியாதியோடும் மற்ற எதுவாக இருந்தாலும், சபையார் மத்தியில் அவர் உங்களை அழைப்பதைப் பாருங்கள். அவரிடத்தில் கிருபையைக் கண்டடையுங்கள், இன்றிரவு சபையில் காரியங்கள் நடப்பதைப் பாருங்கள் அல்லது இன்றிரவு கூட அல்ல, ஆனால் இப்போதே: இப்போதே. 65 ஓ, அவள் அவரிடம் சென்று, "நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்" என்றாள். ஆனால் பாருங்கள், "ஆண்டவரே, என் சகோதரன் இங்கே மரித்திருக்கிறான். அவன் மரித்து நான்கு நாட்களாகிவிட்டன. அவனுடைய சரீரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தோல் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. சிதைவு, ஒரு பயங்கரமான துர்நாற்றம் ஏற்பட்டுவிட்டது. அவன் மரித்துவிட்டான். அவன் அங்கே கல்லறையில் நாற்ற மெடுக்கிறான். நீர் இங்கேயிருந்தீரானால், அவன் மரித்திருக்க மாட்டான். ஆனால் ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று இப்பொழுதும் அறிந்திருக்கிறேன்." ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்ற ஒரு சிறிய உணர்வு அவளுக்கு உள்ளே இருந்தது. அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? "ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று இப்பொழுதும் அறிந்திருக்கிறேன்." 66 ஓ, இங்குள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும், எந்த வகையான வியாதியுள்ள ஒவ்வொருவரும்... ஒருவேளை சிகாகோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவரின் அலுவலகத்திலும் நீங்கள் தேடியிருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒவ்வொரு கிளினிக்கிற்கும் சென்றிருக்கலாம், நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கலாம், அது எதுவாக இருந்தாலும்; "ஆனால் ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று இப்பொழுதும் அறிந்திருக்கிறேன்" என்று இருக்க வேண்டும் என நான் தேவனிடத்தில் எவ்வளவு வாஞ்சிக்கிறேன். "இப்பொழுதும்..." "சகோதரர் பிரன்ஹாம், நான் இன்னும் கொஞ்சக் காலம் தான் உயிர்வாழ முடியும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்" என்று நீங்கள் சொல்லலாம். "ஆனால் ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று இப்பொழுதும் அறிந்திருக்கிறேன்." ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. அது சரியா? "சகோதரர் பிரன்ஹாம், என்னால் நடக்க முடியாது; நான் இனிமேல் நடக்கவே மாட்டேன் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்" என்று சொல்லுங்கள். "ஆனால் ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று இப்பொழுதும் அறிந்திருக்கிறேன்." இதோ நீங்கள் இருக்கிறீர்கள். பாருங்கள், பிறகு ஏதோ ஒன்று நடக்கத்தான் வேண்டும். 67 பாருங்கள், நான் இயேசுவைப் பார்க்கிறேன். "உன் சகோதரன் உயிர்த்தெ ழுந்திருப்பான்" என்று அவர் சொன்னார். ஓ, ஆச்சரியமே. அவள் சொன்னாள், "ஆம் ஆண்டவரே, அவன் ஒரு நல்ல பையன், ஒரு நல்ல சிறந்த யூதப் பையன். அவன் ஒரு நல்ல மனிதன். அவன் ஒருபோதும் தவறு செய்ததில்லை. அவன் எல்லாவற்றையும் செய்திருக்கிறான்; அவன் உம்மை விசுவாசிக்கிறான், மற்றும் பல; பொதுவான உயிர்த்தெழுதலில் அவன் உயிர்த்தெழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்." அவரைப் பாருங்கள். நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது என்று பைபிள் கூறுகிறது, சற்று மெலிந்த, குனிந்த தோற்றமுடைய நபராக இருந்தார். ஆனால் அவர் தம்முடைய சிறிய உருவத்தை நிமிர்த்தி, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்றார். அல்லேலூயா. இப்போதும் அவர் அப்படியே இருக்கிறார். ஓ. "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயி ருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப் பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?" அவள் சொன்னாள், "ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்." ஏதோ ஒன்று நடக்கத்தான் வேண்டும். 68 இப்போது தேவனை உங்கள் சிந்தையில் வையுங்கள். அமைதியாக உட்காருங்கள். இதோ நீங்கள் இருக்கிறீர்கள். அவள் எல்லா தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசியிடம் இருந்தாள். இங்கு மரிக்கும் தன்மையுள்ள மாம்சத்தில் பிறந்த ஒரு தீர்க்கதரிசியின் அருகே சூனேமியாள் நின்றிருந்து, அந்த தீர்க்கதரிசியான எலியாவின் அடையாளங்களாலும் அற்புதங்களாலும் அவருடைய முன்னறிவிப்புகளாலும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்திருந்து; சூனேமியாள் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள் என்றால், மரியாளாலும் முடியும். அவள் அவரிடம் வந்தாள். அவள் அவரை "ஆண்டவரே" என்று அழைத்தாள். அவர் யார் என்று அவளுக்குத் தெரியும். "நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று அவள் சொன்னாள். அங்கே ஒரு அறிக்கை செய்கிறவர் இருக்கிறார்; அவர் செய்வதற்கு அவளுடைய இருதயத்தில் ஒரு சாத்தியமற்ற காரியத்தைக் கொண்ட ஒரு விசுவாசி இருக்கிறார், ஆனால் அவள் தேவனுடைய ஈவைக் கண்டு கொள்கிறாள். அவள் தேவனுடைய மனிதனை, அவருடைய குமாரனைக் கண்டுகொள்கிறாள்; அவள் சரியான இடத்தில் இருக்கிறாள். அந்த பற்சக்கரங்கள் ஒவ்வொன்றும், அப்படியே, சரியான இடத்திற்குச் சரியாக நகர்கின்றன. ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும். 69 "அவன் மரித்திருந்தாலும், அவன் அங்கே கல்லறையில் மக்கிக்கொண்டிருந்தாலும், அவன் மரித்து நான்கு நாட்களாகிவிட்டாலும், நான் விசுவாசிக்கிறேன். நான் எதற்கும் விரோதமாக எதையும் கொண்டிருக்கவில்லை. நான் அதைப் பற்றி இனி யோசிக்கப் போவதுகூட இல்லை. உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் நீர்தான், நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஓ, ஆச்சரியமே. "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயி ருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென் றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?" என்று அவர் சொன்னார். அவள், "ஆம், ஆண்டவரே" என்றாள். "அவனை எங்கே வைத்தீர்கள்?" இதோ அவர் செல்கிறார். ஓ. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அந்த இறுதி ஊர்வலம், சில யூதர்கள், உடைந்த இருதயத்துடன், அழுதுகொண்டிருக்க, இயேசுவும் கல்லறையை நோக்கிச் சென்றபோது அழுதார். அது சரியா? 70 இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட சபையிலிருந்து ஒரு சிறந்த வாசகர் என்னிடம் வந்து, "சகோதரர் பிரன்ஹாம், நீங்கள் இயேசுவைப் பற்றி அளவுக்கு அதிகமாக பெருமையாகப் பேசுகிறீர்கள்" என்று சொன்னாள். நான் சொன்னேன், "அவரைப் பற்றி அளவுக்கு அதிகமாக பெருமையாகப் பேசுகிறேனா? அவரைப் பற்றி என்னால் போதுமான அளவு சொல்லவே முடியாது." ...?... அவள் சொன்னாள், "ஓ, அவர் வெறும் ஒரு மனிதர் தான். அவர் ஒரு தத்துவஞானி." நான் சொன்னேன், "அவர் தேவனாகவே இருந்தார், அதுதான் அவராக இருந்தார்." அவள் சொன்னாள், "ஓ, இல்லை. அவர் தெய்வீகமானவர் அல்ல, சகோதரர் பிரன்ஹாம்." "அவர் தெய்வீகமானவர் அல்ல" என்றாள். நான் சொன்னேன், "தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கினார்." அவள் சொன்னாள், "ஓ, அவருடைய அன்பு மற்றும் அதுபோன்ற வகைகளில், அவர் தேவனாக இருந்தார்." நான் சொன்னேன், "இல்லை, அவர்தான் யெகோவா." அவர் ஒரு நல்ல மனிதர், ஒரு சாதாரண மனிதர் என்று சொல்லி, மக்கள் அவரைத் தட்டிக்கழிக்க முயலுகிறார்கள். அவர் தெய்வீகமானவர், மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன், தேவதூதர்களால் காணப்பட்டார், பிரசங்கிக்கப்பட்டார், பரலோகத்திலே மகிமை யிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார், பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். நிச்சயமாகவே, அவர் தேவனாக இருந்தார். அவர் ஒரு மனிதனை விட மேலானவராக இருந்தார். அவர் ஒரு தேவ-மனிதராக இருந்தார். அவர் மாம்சத்தில் மனிதராக இருந்தார், ஆனால் அவர் ஆவியில் தேவனாக இருந்தார். அதுதான் அவராக இருந்தார், சோதனையையும் இரத்தசாட்சி மரணத்தையும் அனுபவிப் பதற்காகவும், மனித குலத்திற்கு வந்திருந்த பாவங்களைத் தம்மேல் எடுத்துக் கொள்வதற்காகவும், நம்முடைய பாவங்களை தாமே சுமப்பதற்காகவும் தேவன் இறங்கி வந்தார். 71 அவள் சொன்னாள், "நீங்கள் உங்கள் மனதை சற்றுத் திறந்தால், அவர் வெறும் ஒரு மனிதர் தான் என்பதை என்னால் பைபிள் மூலமாக உங்களுக்கு நிரூபிக்க முடியும்." நான் சொன்னேன், "அதை பைபிள் மூலமாகச் செய்யுங்கள், நான் அதை விசுவாசிக்கிறேன்." அவள் சொன்னாள், "லாசருவின் அந்த உயிர்த்தெழுதலுக்காக அவர் சென்றபோது..." "அங்கே செல்லும் வழியில், மற்ற மக்களுடன் சேர்ந்து அவரும் அழுதார். 'இயேசு கண்ணீர் விட்டார்' என்று பைபிள் சொல்கிறது. அது அவர் ஒரு மரிக்கும் தன்மையுள்ள மனிதர் என்பதை நிரூபித்தது" என்றாள். ஆம், நான் சொன்னேன், "அவர் அழுதிருக்கலாம். அது உண்மைதான். லாசருவைச் சந்திக்க அவர் செல்லும் வழியில், மனிதனைப் பொறுத்தவரையில் அவர் மனிதராகவே இருந்தார். அவருடைய மாம்சத்தில் அவர் மனிதராக இருந்தார், ஆனால் அவருடைய ஆவியில் அவர் தேவனாக இருந்தார்." நான் சொன்னேன், "அவர் அழுதார். அது ஒரு மனிதன் அழுவது. லாசருவின் கல்லறைக்குச் செல்லும்போது, அவர் அழுதுகொண்டிருந்தபோது அவர் மனிதராக இருந்தார், ஆனால் அவர் அங்கே நின்று, அந்த சிறிய உடலை நிமிர்த்தி, 'லாசருவே, வெளியே வா' என்று சொன்னபோது, நான்கு நாட்களாக மரித்திருந்த ஒரு மனிதன் மீண்டும் உயிருடன் வந்தான். அது ஒரு மனிதனை விட மேலான ஒன்று. அங்கே தேவனே பேசிக் கொண்டிருந்தார்." அல்லேலூயா. தேவன் தமது குமாரனுக்குள் இருந்தார். அது மரிக்கும் தன்மையுள்ள மாம்சத்தின் மூலமாக தேவன் பேசுவதாக இருந்தது. சிதைவுக்கு அதன் எஜமானன் யார் என்று தெரிந்திருந்தது. இதை விசுவாசிக்கிறாயா? 72 அந்த இரவில் அவர் அங்கே அந்த மலையின் மீது இருந்தபோது அவர் மனிதராக இருந்தார், கீழே இறங்கி வந்து அந்த சிறிய அத்திமரத்தைச் சுற்றிப் பார்த்தார், அங்கே உண்பதற்கு ஒன்றும் இல்லை. அவர் பசியாயிருந்தார். அவர் பசியாயிருந்தபோது அவர் ஒரு மனிதராக இருந்தார். ஆனால் அவர் ஐந்து பிஸ்கெட்டுகளையும் இரண்டு மீன் களையும் எடுத்து ஐயாயிரம் மக்களுக்கு உணவளித்தபோது, அது ஒரு மனிதனை விட மேலான ஒன்று; அந்த மனிதனுக்குள் தேவன் இருந்தார்." அல்லேலூயா. அந்த இரவில் கடலின் பத்தாயிரம் பிசாசுகள் அவரை மூழ்கடிப்போம் என்று சபதம் செய்தபோது, அவர் அந்த சிறிய படகின் பின்பகுதியில் படுத்திருந்தபோது அவர் ஒரு மனிதராக இருந்தார். அந்த சிறிய பழைய புயல் எழுந்தது, அந்த ஏரியில் ஒரு பாட்டில் மூடியைப் போல அந்த சிறிய படகு அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டது, அப்படியே. பிசாசு, "இன்றிரவு நாம் அவரை மூழ்கடிப்போம்" என்று சொன்னது. அவர் மிகவும் சோர்வாக இருந்தார்; நாள் முழுவதும் பிரசங்கிப்பதிலும் சுகமாக்குவதிலும் அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றிருந்தது, அவர் எவ்வளவு சோர்வாக இருந்தார் என்றால் புயல் கூட அவரை எழுப்பவில்லை. ஆனால் சீஷர்கள் அவரை எழுப்பியபோது, அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதராக அவர் இருந்தார். அவர் படகின் விளிம்பில் தம் பாதத்தை வைத்து, "இரையாதே, அமைதலாயிரு" என்று சொன்னபோது, அங்கே அது ஒரு மனிதனை விட மேலான ஒன்று. அது தமது குமாரனின் மூலமாக தேவன் பேசுவதாக இருந்தது. அல்லேலூயா. ஆம், அது அப்படித்தான் இருந்தது. இதை விசுவாசிக்கிறாயா? 73 கல்வாரியிலே அங்கே அவர், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று சத்தமிட்டபோது அவர் ஒரு மனிதராக இருந்தார். அவர் ஒரு மனிதனைப் போல மரித்தார்; ஆனால் ஈஸ்டர் காலையிலே மரணத்தின் முத்திரைகளை, சிதைவை உடைத்துக்கொண்டு அவர் உயிர்த்தெழுந்தார், மேலேயுள்ள பிதாவினிடத்திற்கு ஏறிச் செல்லும்படி எழுந்திருந்து, அவர் ஒரு மனிதனை விட மேலானவர் என்பதைக் காண்பித்தார். அவர் மாம்சத்தில் தேவனாக இருந்தார். இதை விசுவாசிக்கிறாயா? இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. இதை விசுவாசிக்கிறாயா? அநேக வருடங்களாகப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ தன் மாம்சத்தின் பெலவீனத்தோடு, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், அவளுடைய இரத்தப்போக்கு நின்றது, உடனடியாக நின்றது. இதை விசுவாசிக்கிறாயா? 74 யவீருவின் மகள் மரித்திருந்தாள். அவர் ஆற்றைக் கடந்து, அங்கே வருவதை என்னால் காண முடிகிறது; அவர், "நான் மேலே சென்று அவளுக்காக ஜெபிப்பேன்" என்று சொன்னார். இதோ இங்கே ஒரு தூதன் வந்து, "உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள்; போதகரை வருத்தப்படுத்த வேண்டாம்" என்றான். சிறிய யவீருவின் இருதயம் சோர்ந்துபோகத் தொடங்கியது. இயேசுவின் அந்த இருண்ட கண்கள் சுற்றிலும் பார்த்து, "'பயப்படாதே? நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய்' என்று நான் சொல்லவில்லையா?" என்றார். அங்கிருந்த மக்கள் இருந்த அந்த மரண அறைக்குள் அவர் நடந்து சென்று, "அவள் மரிக்கவில்லை; நித்திரையாயிருக்கிறாள்" என்று சொன்னார். ஓ, அவர்கள் சொன்னார்கள், "இங்கே சுற்றிக்கொண்டிருக்கும் அந்த வெறியன்..." அவர், "அவர்களை வெளியேற்றுங்கள்" என்றார். அவர் அவர்களை அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு, அருகே நடந்து சென்ற போது, அவர் வேறு பாஷையில் பேசக்கூடிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கொண்டிருந்தார். இந்த பூமிக்குரிய காரியங்கள் அனைத்தும் அவருக்குத் தோற்றுப்போயின, அங்கே அவர் வேறொரு பாஷையில் பேசி, "தலித்தா" அதாவது "சிறுபெண்ணே, எழுந்திரு" என்றார். ஆவிக்குரிய உலகத்திலிருந்து, ஒரு சிறுமி மரித்துப்போய், கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, அவர் ஆவிக்குரிய உலகத்திற்குள் ஒரு வார்த்தையைப் பேசினார், மரித்திருந்த அந்தச் சிறுமி தன் கால்களில் எழுந்து நின்று மீண்டும் உயிர்வாழ்ந்தாள். அல்லேலூயா. அல்லேலூயா. இதை விசுவாசிக்கிறாயா? அவர் இன்று இங்கே இருக்கிறார். இதை விசுவாசிக்கிறாயா? 75 சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இண்டியானாவிலுள்ள கிரீன்ஸ் மில்லில் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, தரிசனங்களாலும் காரியங்களாலும் நான் கலக்கமுற்று அலைக் கழிக்கப்பட்டேன், புதர்களிலிருந்து ஒரு அமானுஷ்ய வல்லமை பேசியது, அது பிசாசு, அதனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று போதகர்கள் என்னிடம் கூறினார்கள். ஒரு நாள் இரவு அங்கே தரையின் குறுக்கே ஒரு வெளிச்சம் மின்னியது, கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மனிதர் என்னை நோக்கி நடந்து வந்து, "வியாதியுள்ள மக்களுக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்வதற்காகவே சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமுகத்திலிருந்து நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். இந்தக் காரியங்கள் அனைத்தும் நடக்கும்: இருதயங்களின் இரகசியங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், மற்றும் பல. மக்கள் உங்களை விசுவாசிக்கும்படி செய்து, நீங்கள் ஜெபிக்கும்போது உண்மையாக இருந்தால், உங்கள் ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்காது" என்று சொன்னார். இதை விசுவாசிக்கிறாயா? 76 அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். கட்டடத்தின் மீது வரும் ஒரு பால்வீதியைப் போல இப்போது சபைக்குள் அசைவாடிக் கொண்டி ருக்கும் இந்த உணர்வு, பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய அதே பரிசுத்த ஆவியா னவர்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? உங்கள் இருதயத்தின் ஆழத்தில் அது உங்களை அங்கேயே வெடிக்கச் செய்யும் அளவுக்கு அசைவாடிக்கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த மதிய வேளையில் உள்ளே நுழைய முயற்சிக்கும் பரிசுத்த ஆவியானவர்தான் அது என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அவர் இப்போது இங்கே உள்ள ஒவ்வொரு நபரையும் சுகமாக்குவார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? நமது கரங்களை உயர்த்தி அவருக்குத் துதி செலுத்துவோம். அல்லேலூயா, அல்லேலூயா. கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் ...?... உமது நற்குணத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ தேவனே, நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் ஒரு ஜனத்தை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஓ, கர்த்தராகிய இயேசுவே வாருங்கள், இந்த மக்கள் கூட்டத்தை சுகமாக்கும். பரிசுத்த ஆவியானவரை இங்கே அனுப்பும். ஓ தேவனே, பலத்த சுழல்காற்றைப் போல இந்த வரிசைகளில் அங்குமிங்கும் பாய்ந்து செல்லும். ஒவ்வொரு இருதயத்தையும் தொடும், விசுவாசத்தை உணரும்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். அல்லேலூயா, அல்லேலூயா ...?... நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (52-0810A) 2